Type to search

Editorial

வடக்கு மாகாணத்தை நோக்கிய தனிமைப்படுத்தல் எதற்கானது?

Share

கொரோனா தொற்றுக்குப் பின்பாக, தமிழ் அரசியல்வாதிகளில் பலர் மெளனம் காக் கின்றனர் போல் தெரிகிறது.

சற்று ஆற அமர இருந்து எங்கே இவர்கள் என்று நமக்குள் கேள்வி எழுப்பும் போது கால சூழல்களும் நம் அரசியலைத் தீர்மானிக்கிறதோ என்று எண்ணத் தோன்றும்.

எது எவ்வாறாயினும் இன்றைய எம் தமிழினத்துக்காக நாம் அனைவரும் ஒன்றுபட்டு ஒருமித்துக் குரல் கொடுக்க வேண்டும் என்பதை மட்டுமே இப்போதைக்குக் கூற முடியும்.

அதிலும் ஆளுந்தரப்பு அல்லது தேசியக் கட்சிகளுடன் சேர்ந்திருக்கின்ற தமிழ் அரசி யல்வாதிகள் குரல் கொடுப்பதற்கான சந்தர்ப்பமாக இன்றைய சூழ்நிலை அமைந்துள்ளது.

ஆம், கொரோனா தொற்று உலகம் முழுவதையும் ஆட்டிப் படைத்த வண்ணமுள்ளது.
இதில் இலங்கைத் தீவும் விதிவிலக்கல்ல.

இலங்கையைப் பொறுத்தவரை கொரோ னாத் தொற்று என்பதை மாவட்ட ரீதியாக நோக்கும்போது 21 மாவட்டங்களில் கொரோனா கட்டுப்பாட்டில் உள்ளது என்பதைக் கூற முடியும்

அதிலும் யாழ்ப்பாண மாவட்டம் கொரோ னாத் தொற்றை எதிர்கொண்டு அதனை முறி யடித்து வெற்றி கண்டது.

இது விடயத்தில் மருத்துவ சமூகமும் இதர உத்தியோகத்தர்களும் பொதுமக்களும் வழங் கிய ஒத்துழைப்பு போற்றுதலுக்குரியது.

நிலைமை இதுவாக இருக்கையில், தனிமைப்படுத்தல் முகாம்களை அமைப்பதில் வடக்கு மாகாணத்தைத் தெரிவு செய்வதானது எந்த வகையிலும் பொருத்தப்பாடான தாக இல்லை.

சுவிஸ் போதகரால் யாழ்ப்பாணத்தில் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்ற தகவல் கிடைத்ததும் சம்பந்தப்பட்ட தரப்புகள் உடனடியாகக் களத்தில் இறங்கி எடுத்த அதிரடி நடவடிக்கைகள் யாழ்ப்பாண மண்ணில் கொரோனாத் தொற்றுப் பரவுவதை தடுத்து நிறுத்தியது.

இந்நிலையில் இலங்கையின் பிற மாகாணங்களைச் சேர்ந்த – கொரோனாத் தொற்று ஏற்படலாம் என்ற ஐயப்பாடு உடையவர்களை வட மாகாணத்துக்கு அழைத்து வந்து அவர்களை இங்கு தங்க வைப்பதென்பது அடிப்படை நியாயமற்ற செயல் என்பதுடன் வடக்கில் தமிழர்கள் வாழ்வதனால் இத்தகைய செயல்கள் நடக்கின்றனவோ என்று எண்ணுகின்ற சூழமைவையும் ஏற்படுத்தி நிற்கிறது.

வடக்கில் தனிமைப்படுத்தல் முகாம்களை அமைப்பதற்கு முன்னதாக இங்குள்ள சுகா தாரத் திணைக்களத்தின், மருத்துவ அதிகாரிகளின் ஆலோசனைகளைப் பெற்றிருக்க வேண்டும்.

ஆனால் இவை எதுவும் நடக்காமல், தனிமைப்படுத்தல் முகாம்களை வடக்கில் அமைத்து, கொரோனா தொற்றுக்கு ஆளாகக் கூடியவர்கள் எனச் சந்தேகிக்கப்படுவோரை இங்கு அழைத்து வரும் போது, வட பகுதியும் அபாயமான வலயமாக ஆக்கப்படுகிறது.

எனவே இது விடயத்தில் இனியேனும் அரசு கவனம் செலுத்த வேண்டும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link