Type to search

Editorial

யூத இனத்தவர்கள் போல நாமும் தமிழர்களாக…

Share

உலகில் யூத மக்கள் பட்ட துன்ப துயரங்கள் சொல்லிமாளா. யூதர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல்கள் அவர்களை உலகம் முழுமைக்கும் பரவச் செய்தது.

இவ்வாறு யூதர்களை வெளியேற்றுவதன் மூலம் தங்களின் இருப்பை நிலைப்படுத்த முடியும் என்று நினைத்தவர்கள் ஈற்றில் படு தோல்வி கண்டனர்.

போVர்க் கொடுமை காரணமாகத் தம் நாட்டை விட்டு வெளியேறிய யூதர்கள் உலகம் முழுவதிலும் வாழத் தலைப்பட்டனர்.

உலகின் எந்த நாட்டில் அவர்கள் வாழ்ந் தாலும் அவர்கள் யூதர்களாகவே வாழ்ந்தனர். வாழ்கின்றனர்.

இதுவே யூத இனம் இன்று அறிவாற்றல் மிகுந்த இனமாக மிளிர்ந்து கொண்டிருக்கக் காரணமாயிற்று.

யூத மக்களை நினைக்கும்போதெல்லாம் எம் ஈழத் தமிழினம் பற்றிய நினைவே நம் உள்ளத்தைத் தொட்டுச் செல்லும்.

இலங்கையின் ஆதிக்குடிகளான தமிழ் மக்கள் சிறுபான்மை என்ற ஒரே காரணத் துக்காக, பெரும்பான்மைச் சிங்களத் தரப்புகள் தமிழ் மக்களுக்குச் செய்யும் அக்கிரமம் கொஞ்சமல்ல.

இலங்கை பெளத்த சிங்கள நாடு என்பதை நிலைநிறுத்துவதற்காகத் தமிழ் இனத்தை வேரறுக்க நினைத்து காலத்துக்குக் காலம் தமிழ் மக்களைச் சங்காரம் செய்கின்ற அக்கிர மம் நடந்தாகிறது.

தவிர, தமிழ் மக்களின் வரலாற்றுத் தொன் மங்களை அழித்துத் துவம்சம் செய்வதிலும் வீறு கொண்ட முனைப்பு எழுகை பெற்றிருப் பதை நாம் காண முடியும்.

இவற்றின் பின்னணியில் பெளத்த துறவி கள் செயலாற்றுகின்ற கொடுமையை சொல்ல வார்த்தை இல்லை.

இவ்வாறான சூழ்நிலையில் தமிழ் மக்கள் தங்கள் இருப்பை, உரிமையை, இனத்துவத் தைக் காக்க யூதர்கள் போல செயற்பட வேண்டியுள்ளது.

ஆம், இலங்கையில் நடந்த யுத்தம் தமிழ் மக்களை உலகெல்லாம் வாழ வைத்துள்ளது.
உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் சிந்தையயல்லாம் தங்கள் தாய்த் தமிழ் மீதாக இருப்பதைக் கண்டு புளகாங்கிதம் அடையா மல் இருக்க முடியாது.

எனினும் என்னோடு தமிழ்ப்பற்று நின்று போகாமல் என் பிள்ளை, பிள்ளையின் பிள்ளை என்றவாறு புலம்பெயர் தேசத்து நம் உறவுகள் செயலாற்றினால், தமிழ் இனத்தை எவராலும் எதுவும் செய்துவிட முடியாது.

இதேவேளை இலங்கைத் திருநாட்டில் இருக்கின்ற அத்தனை தமிழ் மக்களும் தமிழ் உணர்வோடு வாழ்வார்களாயின் தமிழர் தேசத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டிருக்கும் அத் தனை நாசகாரங்களையும் அடித்து நொருக்கி விட முடியும்.

எனவே தமிழ்ப் புத்திஜீவிகள் மற்றும் அனைத்து அரச பணியாளர்கள், மாணவர்கள், வர்த்தகப் பெருமக்கள், அரசியல் தரப்பினர் என அனைவரும் தமிழ் எங்கள் மூச்சு என்று நினைத்தால் அதை வெட்டி விழுத்த எவராலும் முடியாது என்பதே நிஜம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link