தேவலோகக்குழு இலங்கைக்கு விஜயம்
Share
தேவலோகக் குழுவொன்று இலங்கைக்கு திடீர் விஜயம் செய்ததாக ஒரு கற்பனை.
குழுவில் இந்திரன், பிரம்மா, நந்தி, யமன், சித்திரகுப்தன், நாரதர் ஆகிய ஆறு பேர் அடங்கியிருந்தனர்.
தேவலோகக் குழுவினர் இலங்கைப் பாராளு மன்றப் பக்கமாக தங்கள் விஜயத்தை ஆரம் பித்தனர்.
யமன்: சித்திரகுப்தா இதென்ன ஒரே சத்தமும் கூக்குரலுமாக இருக்கிறது.
சித்திரகுப்தன்: சுவாமி இதுதான் இலங்கைப் பாராளுமன்றம். ஏதோ 20ஆவது திருத்த சட்டமூலத்தை அரசாங்கம் கொண்டு வருகிறதாம். அதற்கு எதிராக எதிர்க்கட்சி கள் கூக்குரல் போடுகின்றன.
யமன்: நல்லது. நல்லது. எதிர்க்கட்சிகள் ஆர்ப் பாட்டம் செய்கின்றனவென்றால், இப்போது இரா.சம்பந்தர் ஐயா எதிர்க்கட்சித் தலைவர் இல்லையா?
நந்திதேவர்: சுவாமி அவருடைய காலம் முடிந்துவிட்டது.
யமன்: அதுதானே பார்த்தேன். அரசாங்கத் தின் அனைத்து விடயங்களையும் ஆத ரித்த ஒரே எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தர் என்று தேவலோகத்தில் நாங் கள் பேசிக் கொண்ட ஞாபகம் வருகிறது.
பிரம்மா: அது சரி நாங்கள் ஒருமுறை கிழக் குக்கு விஜயம் செய்தால் என்ன?
இந்திரன்: ஆகட்டும் பிரம்மா
(தேவலேகக் குழு கிழக்கு மாகாணத்துக்கு விஜயம் செய்கிறது)
நாரதர்: இதென்ன புத்த பிக்கு ஒருவர் அடி தடியில் ஈடுபடுகிறார். இவர் புத்தபிரானின் போதனைகளைப் படிக்கவில்லையா?
பிரம்மா: நாரதரே! இவர் மட்டுமல்ல இன்னும் சில புத்த பிக்குகளும் கெளதம புத்தபிரா னின் போதனைகளைப் படிக்கவில்லை என்றறிகிறேன்.
இந்திரன்: அப்படியானால் இதுபற்றி புத்த பிரானுக்குத் தெரியப்படுத்த வேண்டுமல்லவா!
நாரதர்: இஃதெல்லாம் போதிமாதவனுக்குத் தெரியாமல் இருக்காது. என்னைப் பொறுத்த வரை இப்படியானவர்கள் தொடர்பில் எங்கள் யமதர்மராஜன் நடவடிக்கை எடுப் பதுதான் சாலப் பொருத்தம்.
பிரம்மா: நாரதரே! இது இலங்கை இங்கு உன் னுடைய கலகத்தைக் காட்டினால், அவர் கள் உன் கதையை முடித்து விடுவார் கள். பின் நினைவேந்தலும் இல்லாமல் போய்விடும்.
யமன்: சரி சரி நேரம் ஆகிறது நாங்கள் யாழ்ப் பாணத்துக்குச் செல்வோம். யமன் இவ் வாறு கூறியதும் தேவலோகக் குழு புட்பக விமானத்தில் ஏறி யாழ்ப்பாணத்துக்கு வந்தது.
நந்திதேவர்: இஃதென்ன பெரிய கட்டிடம்.
சித்திர: சுவாமி இதுதான் யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையம்.
பிரம்மா: ஓ! இவ்வளவு பெரிய பொலிஸ் நிலை யம் இருந்தும் யாழ்ப்பாணத்தில் களவும் கொள்ளையும் விபத்து மரணங்களும் தாராளமாக நடக்கின்றனவே.
சித்திர.: எல்லாம் எங்கள் யமதர்மராஜனின் சூழ்ச்சிதான் சுவாமி.
பிரம்மா: அஃதென்ன சுற்றிச் சுற்றி வாகனம் ஓடுகிறார்கள்.
நாரதர்: சுவாமி இங்குதான் சாரதி அனுமதிப் பத்திரத்துக்காக வாகனப் பயிற்சி கொடுக் கினம்.
யமன்: அடேங்கப்பா விபத்துக்கும் பயிற்சி நடக்கிறதா? (சிரிப்பு)
இந்திரன்: அது சரி இந்தக் கட்டடம்…
இந்திரன் இவ்வாறு கூறியதும் நாரதர் இந் திரனின் காதில் ஏதோ இரகசியமாகக் கூறினார்.
அவ்வளவுதான் தேவலோகக் குழு புட்பக விமானத்தில் ஏறி வேகமாகப் பறந்தது. விமா னத்திலிருந்து துண்டுப் பிரசுரங்கள் வீசப்பட் டன. அதில் நினைவுகூருவது அடிப்படை மனித உரிமை என்று எழுதப்பட்டிருந்தது.