தீமையாளரையும் அன்பினால் திருத்துக!
Share
ஒரு நாள் இராமகிருஷ்ண பரமஹம்சர் ஆற்றில் நீராடிக் கொண்டிருந்தார்.
அந்நேரம் மட்டத்தேள் ஒன்று ஆற்றில் தத்தளித்துக் கொண்டிருந்தது.
இதனைக் கண்ணுற்ற பரமஹம்சர் தனது கைகளை நீட்டி அந்த மட்டத்தேளைத் தூக்கி னார்.
அவ்வளவுதான் தேள் அவரின் கையில் கொட்டியது. தேள் கொட்டியதும் தன் கையை உதறினார் பரமஹம்சர். மீண்டும் தேள் ஆற்றில் தத்தளிக்கிறது.
தேள் மீது அன்பு கொண்ட பரமஹம்சர் தேளைக் காப்பாற்றுவதற்காக மீண்டும் தன் கையை கொடுக்கிறார். தேளோ திரும்பக் திரும்பக் கொட்டுகிறது.
இந்தச் சம்பவத்தை ஆற்றோரம் பார்த்து நின்ற ஒருவர்; பரமஹம்சரே! நீங்கள் தேளைத் தூக்குகிறீர்கள்.
அது உங்களைக் கொட்டுகிறது. திரும்பத் திரும்ப அதைச் செய்கிறீர்களே எதற்காக என வினாவுகிறார்.
அதற்கு இராமகிருஷ்ண பரமஹம்சர் கூறுகிறார்; மகனே! தேளின் குணம் கொட்டுவது. என் குணம் அதனைக் காப்பாற்றுவது. இதுவரைக்கும் தேள் தன் குணத்தைக் கைவிட வில்லை. நான் மட்டும் எதற்காக என் குணத்தைக் கைவிட வேண்டும் என்றார்.
இராமகிருஷ்ணபரமஹம்சர் உணர்த்திய மேற்போந்த விடயம் எதைக் குறிக்கிறது என் பது பற்றி ஒரு கணம் சிந்திக்க வேண்டும்.
அவ்வாறு சிந்திக்கும்போதுதான் அன்பு எனும் உயர் பண்பு தெரிய வரும்.
ஆம், நம்மைத் தீண்டுகிறவர்கள் துன்பப்பட்டால் கூட, அவர்களுக்கு நாம் உதவி செய்ய வேண்டும். அதுவே அன்பின் வெளிப்பாடு.
அவ்வாறு உதவி செய்யும்போது அவர்கள் நம்மைத் தீண்டலாம். அஃது இங்கு முதன்மை யன்று.
மாறாக துன்பப்படுபவர்கள் மீது அன்பு செலுத்துவதுதான் இங்கு முதன்மையானது.
ஆக, ஒரு தரப்பு காப்பாற்ற வேண்டும் என் கிறது. இன்னோர் தரப்பு கொல்ல வேண்டும் என்று கூக்குரல் இடுகிறது.
நல்லவர்கள் எப்போதும் பிறர் மீது அன்பு செலுத்துவர். தீயவர்கள் எப்போதும் கெடுதி செய்வர். தீமையாளர்களால் இந்த உலகில் நல்லதைச் செய்துவிட முடியாது. நல்லவர் களால் ஒருபோதும் தீமை நடந்துவிடாது.
இதனாலேயே இயேசுபிரான் கூறினார்; உன்னைப் போல் மற்றவரையும் நேசி என்று. மற்றவர்களை நேசிக்கின்ற உயர்ந்த பண்புதான் அன்பின் அடையாளம்.
இந்தியாவின் தேசபிதா மகாத்மா காந்தியை கோட்சே என்பானின் துப்பாக்கிரவைகள் துளைக்கின்றன. காந்தியடிகள் நிலத்திடை சரிகின்றார்.
அவரின் உயிர் பிரியப் போகிறது.
அந்த நேரத்திலும் காந்தியடிகள் கூறுகிறார்; என்னைச் சுட்டவனைத் தண்டித்து விடா தீர்கள் என்று. இதுவே உச்சமான அன்பு.
ஆக, உங்களை நோக்கி தீய அம்புகளை எறிகின்றவர்களையும் மன்னித்தருள ஆயத்த மாயிருங்கள். அவர்கள் என்றோ ஒருநாள் உங்கள் பெருந்தன்மையை உணர்ந்து கொள்வர்.