Type to search

Editorial

இனப் பிரச்சினைக்கான தீர்வை நோக்கி நகருங்கள்

Share

நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை உள்ளபடி ஹன்சார்ட்டில் வெளியாகியுள்ளது.

உலகின் மூத்த மொழியும் இந்த நாட்டின் ஆதிக்குடிகளின் மொழியுமாகிய தமிழ் மொழி யால் உங்களை வாழ்த்துகிறேன் என நீதியரசர் விக்னேஸ்வரன் புதிய சபாநாயகரை வாழ்த்தினார்.

இந்த நாட்டின் மூத்த குடிகள் தமிழர்கள் என்பதையும் அவர்களின் தாய் மொழி தமிழ் என்பதையும் நீதியரசர் மிகத் தெளிவாகக் கூறியதால், வெகுண்டெழுந்த சிங்களப் பாராளு மன்ற உறுப்பினர்கள் சிலர்,

நீதியரசர் விக்னேஸ்வரனின் மேற்குறித்த உரைப்பகுதியை ஹன்சார்ட்டில் இருந்து நீக்க வேண்டும் என சபாநாயகரிடம் கோரிக்கை விட்டிருந்தனர்.

எனினும் அவர்களின் கோரிக்கையை மீறி நீதியரசர் விக்னேஸ்வரனின் உரை ஹன் சார்ட்டில் அப்படியே வெளியிடப்பட்டுள்ளது.

இச்செயலானது சபாநாயகர் மீது நம் பிக்கையை ஏற்படுத்துவதாக உள்ளது.

இதற்கு மேலாக, நீதியரசர் விக்னேஸ்வரனைப் பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைத்தது எத்துணை பொருத்தம் என்பதும் அனை வராலும் உணரப்படுகிறது.

இவை ஒருபுறமிருக்க, மீண்டும் அரசியலமைப்புச் சீர்திருத்தம் என்ற வேதாளம் முருங்கை மரத்தில் ஏறத்தலைப்பட்டுள்ளது.

ஏலவே அரசியலமைப்புச் சீர்திருத்தத்தின் மூலமாக தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு என்ற வாக்குறுதிகள் அனைத்தும் தவிடு பொடியாகிப் போயிற்று.

அரசியலமைப்புச் சீர்திருத்தத்தின் மூலம் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்று வெறுமை பேசிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்ட பயன் தமிழ் மக்களின் செல் வாக்கை இழந்ததுதான்.

இதுதான் என்றால் இல்லை, எவருக்கும் நேர்மையில்லாதவர் என்று கூறுமளவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க படுதோல்வி கண்டார்.

இதுவே ஈற்றில் கண்ட பயன் என்றாயிற்று.

இதனோடு அரசியலமைப்புச் சீர்திருத்தம் முற்றுப் பெற்றது என்றால் இல்லை. புதிய ஆட்சியாளர்களும் அரசியலமைப்பு என்ற காவடியைத் தூக்கித் தோளில் வைத்து கூத் தாடிக் காலங் கழிக்க முனைகின்றனர்.

இத்தகைய காலங் கடத்தும் வேலைகளுக்கு இடம் கொடாமல், தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றுபட்டு இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்த பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கான பூர்வாங்க வேலைகளைச் செய்தாக வேண்டும்.

இதற்காக தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றுபடுவதுடன் பேச்சுக்களுக்கான சர்வதேச உதவிகளையும் இணைத்துக் கொண்டு களத்தில் இறங்க வேண்டும். இதுவே இன்றைய உடனடித் தேவையாகும்.

தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களுக் கிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதில் தமிழ் மக்கள் பேரவை அனுசரணை வழங்குவது நன்மை தருவதாகும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link