மகளின் பெயரை வெளியிட்ட நகுல்
Share
பாய்ஸ் படம் மூலம் நடிகராக அறிமுகமாகி பல படங்களில் நடித்துள்ள நகுல், தன்னுடைய மகளின் பெயரை அறிவித்திருக்கிறார்.
சங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் நகுல். இதையடுத்து காதலில் விழுந்தேன், மாசிலாமணி, கந்த கோட்டை உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். 2016 ஆம் ஆண்டு தன்னுடைய காதலி ஸ்ருதியை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில் நடிகர் நகுல் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில், எங்களுக்கு கிடைத்த அன்பு மற்றும் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. குழந்தைக்கு அகீரா என்று பெயரிட்டுள்ளனர். இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து கூறி வருகிறார்கள்.