கொரோனா வைரஸ் காரணமாக இலங்கையில் முதலாவதாக உயிரிழந்த நபரின் உடல் நேற்று அரச செலவில் மின்சார மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் நேற்று முன்தினம் மாரவில பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய தர்மசிறி ஜனானந்த என்பவர் உயிரிழந்திருந்தார். குறித்த நபரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படமாட்டாது ...
யாழில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு தொடர்ந்து நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்குச் சட்டம் பற்றிய புதிய அறிவித்தலை ஜனாதிபதி ஊடகப் பிரிவு நேற்று ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளது. அவ்வறிக்கையிலேயே மேற் படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ...
கொரோனா வைரஸை ஒழிக்க ஊரடங்கு உத்தரவு போட்டு மக்களை வீடுகளுக்குள் முடக்குவது மாத்திரமே உரிய பலன் தராது என உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டியது. மனித குலத்திற்கு பெரும் சவா லாக விளங்கி வரும் கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் இது வரையில் 20 ஆயிரத்திற்கும் மேற் பட்ட ...
நம் நாட்டுக்காக, குடும்பத்துக் காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக் கப்பட்டுள்ள வேளையில் வெளி யில் வருவதைத் தவிருங்கள் என்று வாகனச் சாரதிகளிடம் பொலி ஸார் வேண்டுகோள் விடுத்தனர். இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி அறி வித்துள்ளார். அதன்படி நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி முதல் ...
மேல், சப்ரகமுவ மற்றும் வட மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களி லும் சில இடங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப் படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங் களில் பிரதானமாக சீரான வானிலை தொடர்ந்து ...
சீனாவின் வுஹான் நகரை தலைமை இடமாகக் கொண்ட ஹபேய் மாகாணத்தில் சுமார் 5.6 கோடி மக்கள் வசிக்கின்றனர். வுஹானில் மட்டும் ஒரு கோடியே 10 இலட்சம் பேர் வசிக்கின்றனர். கொரோனா வைரஸ் தாக்குதலைத் தொடர்ந்து கடந்த 3 மாதங்களாக சீனா முடங் கிப்போனது. 9 வாரங்களாக அங்கு ஊர ...
பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 3076 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் இதுவரையான காலப்பகுதி யிலேயே குறித்த நபர் கள் கைது செய்யப்பட்டதாக தெரி விக்கப்படுகின்றது. அத்துடன் மோட்டார் சைக்கிள் கள் உட்பட 771 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக ...
கூட்டுறவுத் திணைக்களத்தால் அபி எனதுரு கெதர இன்ன அதாவது நாம் வரும் வரை வீட்டில் இருங்கள் என்ற பெயரில் ஆரம்பிக் கப்பட்ட உலர் உணவுப் பொருட்களை வீட்டுக்கு வீடு சென்று விற்பனை செய்யும் வேலைத்திட் டம் மேல் மாகாணத்தில் ஆரம்பிக் கப்பட்டது. இந்தத் திட்டம் நேற்று முன் தினம் ...
ஊரடங்குச் சட்டத்தால் வாழ் வாதார ரீதியாகப் பாதிக்கப்பட்ட குப்பிழானைச் சேர்ந்த 47 குடும் பங்களுக்கு குப்பிழான் விக் னேஸ்வரா விளையாட்டுக் கழக இளைஞர்களால் ஒருதொகுதி உலர் உணவுப் பொருட்கள் நேற்று முன்தினம் புதன்கிழமை வழங்கப்பட்டன. பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வீடுகளுக்குச் சென்று இவ்வாறு உதவிகள் வழங்கப்பட்டன.
யாழ்.மாநகர சபை எல்லைக் குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் கூடும் இடங்களில் கிருமித் தொற்று நீக்கி விசிறும் பணி நேற்றும் முன்னெடுக் கப்பட்டது. யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பணி குருநகர் சந்தைப் பகுதி உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் முன்னெடுக்கப்பட் டது. விசேட அதிரடிப் படையினரின் கொழும்பிலிருந்து ...