ஈரானிய எண்ணெயை விற்பனை செய்வதற்கு தற்காலிகமாக அனுமதிக்கும் வகையில், அமெரிக்க திறைசேரி திணைக்களம் இன்று நடவடிக்கை எடுத்துள்ளதுடன், அந்தப் பொருள் மீது பொதுவாக விதிக்கப்படும் கட்டுப்பாடுகளை நீக்கும் 60 நாட்களுக்கான “பொது உரிமம்” ஒன்றையும் வெளியிட்டுள்ளது. “சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வரும் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகளுக்கு இணங்க, ஹோர்முஸ் நீரணையில் சுதந்திரமான ...
க.பொ.த (உயர் தர) பரீட்சை – 2026 விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளுக்காக இதுவரை விண்ணப்பிக்க முடியாமல் போன பரீட்சகர்களிடமிருந்து கிடைத்துள்ள கோரிக்கைகளைக் கருத்திற்கொண்டு, விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளுக்காக இணையவழியில் (Online) விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை 2026.06.26 ஆம் திகதி வரை நீடிப்பதற்குத் தீர்மானித்துள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. ...
தமிழகம் – இராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்திலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த 45 லட்சம் இந்தியா ரூபா மதிப்பிலான 300 கிலோ கடல் அட்டைகளை பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை (21) பறிமுதல் செய்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் வடக்கு துறைமுகம் கடற்கரைப் பகுதியிலிருந்து இலங்கைக்கு தடை செய்யப்பட்ட கடல் ...
கேகாலை, மொலகொட, மங்களகம பகுதியில் தனியார் பேருந்து ஒன்று மற்றும் பல வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதிக்கொண்டதில் ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் காயமடைந்த 10 பேர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சுமார் 7 வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதிக்கொண்டதிலேயே ...
பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் தமது பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இன்று (22) காலை லண்டனில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இந்த அறிவிப்பை வௌியிட்டுள்ளார். தற்போது அங்கு ஏற்பட்டுள்ள அரசியல் அழுத்தங்களுக்கு மத்தியில் அவர் தமது பதவியில் இருந்து விலகியுள்ளார். தமது ...
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகிப்பதற்குத் தகுதியற்றவர் எனத் தீர்ப்பளிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நிர்வாகச் செயலாளர் ரேணுக பெரேராவினால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு ...
AI இன் உதவியுடன் தலை ஒட்டிப்பிறந்த இரட்டைப்பிறவி சத்திரசிகிச்சை மூலம் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த இரட்டை சகோதரிகள் கடந்த 2023ம் ஆண்டு நைஜீரியாவில் பிறந்துள்ளனர். தலைப் பகுதியில் ஒட்டிப்பிறந்த இவர்களை பிறப்பில் சத்திரகிச்சைக்கு உட்படுத்துவதில் மருத்துவ ரீதியிலான சிக்கல்கள் காணப்பட்டன. இந்நிலையில் மூளை திசுக்கள் மாத்திரமன்றி இரத்த குழாய்களும் ...
பிலிப்பைன்ஸில் உள்ள பாடசாலை ஒன்றில் இன்று (22) நடந்த துப்பாக்கி சூட்டில் 3 மாணவர்கள் பலியாகியுள்ளனர். பிலிப்பைன்ஸ் மத்திய பகுதியில் தக்லோபன் நகரில் உள்ள பாடசாலை ஒன்றிலேயே இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பதிவாகியுள்ளது. வழமைப்போல் பாடசாலை இயங்கி வந்த நிலையில், 2 மர்ம நபர்கள் திடீரென உள்ளே ...
முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் அதிவேக ஒருநாள் அரைச்சதத்தை பதிவு செய்து இந்திய ‘ஏ’ அணியின் வைபவ் சூர்யவன்சி நேற்று (21) உலக சாதனை படைத்துள்ளார். இலங்கை ‘ஏ’ அணிக்கு எதிராக தம்புள்ளையில் நடைபெற்று வரும் போட்டியிலேயே அவர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதில் வெறும் 11 பந்துகளில் அவர் ...
சுகாதாரமான பாடசாலை சிற்றுண்டிச்சாலைகள் தொடர்பான புதிய வழிகாட்டி இன்று (22) வெளியிடப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சின் ஊட்டச்சத்து பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் மொனிகா விஜேரத்ன இதுகுறித்து தெரிவிக்கையில்; சுகாதார அமைச்சரின் தலைமையில், கொழும்பு மருத்துவ பீட கேட்போர் கூடத்தில் இந்த வெளியீட்டு விழா நடைபெறவுள்ளதாகக் ...