சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படும் ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் நவீன கைபேசியில் (iPhone) பாதுகாப்புக்காக இடப்பட்டிருந்த டிஜிட்டல் முகக் கடவையை) திறந்து விசாரணைகளுக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறு, அமெரிக்காவிலுள்ள ‘ஆப்பிள்’தாய் நிறுவனத்திற்கு கோட்டை நீதிவான் பசன் அமரசேன நேற்று முன்தினம் (12) ...
2026 ஆம் ஆண்டிற்கான ஒரு டிரில்லியன் ரூபாய் வருமான இலக்கை நேற்று முன்தினம் எட்டியுள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டிற்காக சுங்கத் திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட மொத்த வருமான இலக்கு 2.206 டிரில்லியன் ரூபாயாகும். அதில் ஒரு டிரில்லியன் ரூபாய் வருமானத்தை நேற்று முன்தினம் நிலவரப்படி ஈட்ட முடிந்துள்ளதாக சுங்கத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. ...
தமிழக சட்டசபை தேர்தலில் வாக்களித்த இலங்கையர் உட்பட மூன்று வௌிநாட்டு பிரஜைகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கை, கனடா மற்றும் அவுஸ்திரேலிய நாடுகளில் குடியுமை பெற்ற மூவரே இவ்வாறு தமிழக சட்டசபை தேர்தலில் வாக்களித்துள்ளதாக தெரியவந்துள்ளது. சென்னை அசோக் நகரை பூர்வீகமாக கொண்ட ...
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டினை முன்னெடுத்துச் செல்ல முடியாது என பிரதிவாதி தரப்பால் முன்வைக்கப்பட்ட ஆரம்பக்கட்ட ஆட்சேபனையை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (14) நிராகரித்தது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்க ...
ஆசிய நாடு ஒன்றிலிருந்து சைபர் குற்றவாளிகளால் திருடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 6.6 மில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை ஓமான் அரச பொலிஸார் மீட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தத் தொகையை ஓமானில் உள்ள வங்கி ஒன்றின் ஊடாக அந்நாட்டு நாணயத்திற்கு மாற்ற முயன்றபோது, ஓமான் அரச பொலிஸார் அதனைத் ...
இலங்கைக்கு தென்மேற்கு திசையில் நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று முற்பகல் 9.30 மணிக்கு வௌியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அறிவிப்பு நாளை (15) முற்பகல் 08.30 மணி வரை செல்லுபடியாகும் ...
தோட்ட மக்களை மீள்குடியேற்றுவதற்காக நிரந்தர வீடுகளின் நிர்மாணப் பணிகள் நிறைவடையும் வரை அதற்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் தற்காலிக வீடுகளை அமைத்துக் கொடுக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார். நுவரெலியா மாவட்டத்தில் மீள்குடியேற்றத் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி தலைமையில் விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் ...
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷாணி அபேசேகரவை, பிரதி பொலிஸ் மா அதிபர் பதவிக்கு தரம் உயர்த்துமாறு நிர்வாக மேன்முறையீட்டு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான தீர்மானம் நேற்று (13) தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதவி உயர்வானது 2026 ஒகஸ்ட் 25 ...
இலங்கையில் ஒவ்வோர் ஆண்டும் நிகழும் மரணங்களில் சுமார் 6 சதவீதமானவை ஆஸ்துமா நோயினால் ஏற்படுவதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவிக்கின்றனர். சரியான சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்வதன் மூலம் இந்த நோயைக் குணப்படுத்த முடியும் என இலங்கை சுவாச நோய்கள் தொடர்பான விசேட வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் தலைவர், விசேட வைத்திய நிபுணர் ...
கணேமுல்ல சஞ்சீவ என்பவரைக் கொலை செய்வதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் ‘கம்பஹா ஒஸ்மண்ட்’ என அழைக்கப்படும் ஒஸ்மண்ட் குணசேகர பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரிடமிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிப்பீட்டர் ரக துப்பாக்கி ஒன்று, இரண்டு மெகசின்கள் மற்றும் 10 தோட்டாக்கள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த சந்தேகநபர் ...