ருகுணு பல்கலைக்கழகத்தின் மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் பீடத்தில் கல்வி கற்று வந்த மாணவி ஒருவர், டெங்கு காய்ச்சல் காரணமாக துரதிர்ஷ்டவசமான முறையில் உயிரிழந்துள்ளார். இவ்வாறு அகால மரணமடைந்தவர் மாத்தறை, தெனியாய பகுதியைச் சேர்ந்த, ருகுணு பல்கலைக்கழகத்தின் 46ஆவது மாணவர் குழுவைச் சேர்ந்த சந்தலி தாரகா என்ற மாணவியாவார். ...
மன்னார், பள்ளிமுனை பிரதான வீதியில் இயங்கி வந்த வடை தயாரிப்பு நிலையம் ஒன்று, சுகாதார அதிகாரிகளால் இன்று (23) மேற்கொள்ளப்பட்ட திடீர் ஆய்வின்போது சுகாதார சீர்கேடுகளுடன் இயக்கியமை கண்டறியப்பட்டு, உடனடியாக மூடப்பட்டுள்ளது. மன்னார் நகர சபை பொது சுகாதார பரிசோதகர் மற்றும் மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி(MOH) ...
அம்பாறை டிப்போவுக்கு சொந்தமான இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்து ஒன்று வெல்லம்பிட்டி பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. பேருந்து சாரதிக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக பேருந்து கட்டுப்பாட்டை இழந்ததால், இன்று (24) அதிகாலை 5.30 மணியளவில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. கொழும்பு கோட்டையிலிருந்து அம்பாறை நோக்கி பயணித்த இந்தப் பேருந்து, ...
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்காக அன்பளிப்பாக வழங்கப்பட்ட நடராஜர் சிலையை விரைவில் பிரதிஷ்டை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு, வடக்கு மாகாண சபையின் முன்னாள் அவைத் தலைவரான சி.வீ.கே. சிவஞானம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகருக்கு அவர் ...
யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 32ஆவது நாள் பணிகள் நேற்று (23) நடைபெற்றன. நேற்றய தினம் மட்டும் 19 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை மொத்தமாக 412 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 409 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் ...
அறுவை சிகிச்சையின் தந்தை என போற்றப்படும் இந்தியாவைச் சேர்ந்த மகரிஷி சுஷ்ருதரின் வெண்கல சிலை ஸ்காட்லாந்து தலைநகர் எடின்பர்க்கில் திறந்து வைக்கப்பட்டது. உத்தர பிரதேசத்தின் வாரணாசியில், 2,600 ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்த மகரிஷி சுஷ்ருதர் ஒரு வரலாற்று சிறப்புமிக்க மருத்துவ அறிஞர். உலக மருத்துவ வரலாற்றில் இவர், அறுவை ...
ஜனவரி மாத தொடக்கம் முதல் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 11 இலட்சம் (1.1 மில்லியன்) எல்லையைத் தாண்டியுள்ளது. அதன்படி, ஜனவரி 01ஆம் திகதி முதல் ஜூன் 21ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,104,354 ...
ஈரான் நாடு தற்போது கடுமையான நெருக்கடியில் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவிற்கு தேவையான அனைத்தையும் வழங்க ஈரான் தயாராக இருக்கும் இந்தச் சூழலில், அமெரிக்க செனட் சபை கொண்டு வந்துள்ள போர் அதிகாரச் சட்டம் தொடர்பான வாக்கெடுப்பு தேவையற்ற ஒன்று என அவர் விமர்சித்துள்ளார். ...
அமெரிக்க அரசாங்கத்தினால் இலங்கை விமானப்படைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 10 TH-57 ‘சீரேஞ்சர்’ (Sea Ranger) பன்னோக்கு ஹெலிகொப்டர்களை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்கும் நிகழ்வு, நேற்று (23) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இரத்மலானை விமானப்படைத் தளத்தில் நடைபெற்றது. இரத்மலானை விமானப்படைத் தளத்திற்கு வருகை தந்த ஜனாதிபதிக்கு, விமானப்படையினரின் உத்தியோகபூர்வ ...
மகளிர் டி20 உலகக் கிண்ணத்தின் 20-வது லீக் போட்டியில், இலங்கை மகளிர் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அயர்லாந்து மகளிர் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி, இலங்கை ...