யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் நேற்று (19) இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். அச்சுவேலி, பாரதி வீதியைச் சேர்ந்த 22 வயதான குறித்த இளைஞன், சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெறுவதற்காக வாகனப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது. பண்ணைப் பகுதியில் வாகனப் பயிற்சியை முடித்துக்கொண்டு, அவர் வாகனத்திலிருந்து ...
முப்பத்தேழு கோடியே எழுபது இலட்சம் ரூபா பெறுமதியான ஹசீஸ் போதைப்பொருள் தொகையுடன் சந்தேகநபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். விசேட விமானப் பயணிகள் பணம் செலுத்தி வசதிகளைப் பெற்றுக்கொள்ளும் ‘கோல்ட் ரூட்’ பயணிகள் முனையத்தினூடாக இந்த வெளிநாட்டவர் நேற்று (19) நள்ளிரவு ...
பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் மற்றும் மருத்துவர் ஜெயக்குமார் உள்ளிட்டோருக்கு எதிராக தெல்லிப்பழை புற்றுநோய்ப் பிரிவு பெண் வைத்தியர், 2024 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்த வழக்கில் யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதிமன்றம் நேற்று (19) தீர்ப்பளித்துள்ளது. ...
செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை விரைவாகவும், முறையான சாட்சியங்களை பரிசீலனை செய்தும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுத் தருவது அரசாங்கத்தின் கடமையாகும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். செம்மணி மனித புதைகுழி பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் அகழ்வுப் பணிகளை ...
இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லா அமைப்பிற்கும் இடையே இன்று (19) முதல் போர் நிறுத்த உடன்படிக்கை அமுலுக்கு வந்துள்ளதாக அமெரிக்க சிரேஷ்ட அதிகாரி ஒருவர் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். ஹிஸ்புல்லாவும் இஸ்ரேலும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளன என்று பெயர் குறிப்பிட விரும்பாத அந்த அதிகாரி கூறியுள்ளார். மேலும், அமெரிக்கா மற்றும் ...
10 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ‘ஐஸ்’ போதைப்பொருள் தொகையை முச்சக்கரவண்டியொன்றில் கடத்திச் சென்ற 38 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கோனஹேன விசேட அதிரடிப்படையின் விசேட செயற்பாட்டு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர், வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள பெருமளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களும் ஒழுங்கமைக்கப்பட்ட கும்பல் உறுப்பினர்களுமான ‘பொடி சுரேஷ்’ ...
சிறிலங்கா கிரிக்கெட் இடைக்கால குழு தொடர்பாக எழுந்துள்ள சிக்கல் குறித்து கலந்துரையாடுவதற்காக, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) தலைவர் ஜெய் ஷா, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது, சிறிலங்கா கிரிக்கெட் இடைக்கால குழுவின் பிரச்சினையே முதன்மையாக கலந்துரையாடப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ...
எதிர்காலத்தில் பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட்டு, மக்கள் நலன்சார்ந்த புதிய சட்டமூலம் ஒன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று (19) நடைபெற்ற சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் ...
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்ச உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக, இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் இன்றைய தினம் (19) கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த குற்றப்பத்திரிகையில், ஏனைய பிரதிவாதிகளாக சேபாலிகா ...
நெடுந்தீவில் இருந்து கடற்றொழிலுக்காக சென்று காணாமல் போயிருந்த இலங்கை மீனவர் ஒருவரது சடலம் இந்தியாவில் கரையொதுங்கியுள்ளது. குறித்த சடலம் இன்று (19) நாகப்பட்டினம் கடற்கரையோரத்தில் கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த மீனவர் கடந்த 11ஆம் திகதி நெடுந்தீவு பகுதியில் இருந்து கடற்றொழிலுக்காக சென்ற நிலையில் ...