கொழும்பு – மருதானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டி.ஆர். விஜேவர்தன மாவத்தையில் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது சந்தேகநபர்களிடமிருந்து 826 லீற்றர் டீசல் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேகநபர்களிடமிருந்து எரிபொருள் விற்பனை மூலம் ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 72,210 ரூபாய் பணமும் ...
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்து வந்த பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக கைவிட தீர்மானித்துள்ளது. இதற்கமைய இன்று (6) காலை 8 மணியுடன் பணிப்புறக்கணிப்பு நிறைவுக்கு வருவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. தமது பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் நோக்கில் சுகாதார அமைச்சருடன் கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்துமாறு அந்த சங்கம் ...
சுமார் 36 இலட்சத்து 30 ஆயிரம் ரூபா பெறுமதியான சீனத் தயாரிப்பு சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டு வந்த இரண்டு சீனப் பிரஜைகள் இன்று (05) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 23 மற்றும் 24 வயதுடைய சீன ...
எரிபொருள் விநியோகத்தில் நிலவும் சிக்கல்கள் மற்றும் இலாபப் பங்கு குறைக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாட்டின் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களும் நாளை முற்பகல் 9.30 மணி முதல் (06) இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு முன்னால் அமைதிப் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளனர். எரிபொருள் விநியோகத்தின் போது பின்பற்றப்படும் ஒற்றை மற்றும் ...
வடக்குக்கான புகையிரத சேவைகள் எதிர்வரும் 9ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாண புகையிரத நிலையப் பொறுப்பதிகாரி தி. பிரதீபன் தெரிவித்துள்ளார். மஹவ முதல் ஓமந்தை வரையிலான புகையிரதப் பாதையில் ஐந்து புகையிரதப் பாலங்களை மாற்றியமைக்கவும், யானைகள் கடந்து செல்வதற்காக அமைக்கப்பட்ட சுரங்கப்பாதையைப் புனரமைக்கும் பணிகளை மேற்கொள்ளவும் ஏதுவாக, ...
இலங்கையில் டிஜிட்டல் பொருளாதாரத்தை விரிவுபடுத்தும் நோக்கில், 5,000 ரூபாவிற்கும் குறைவான கியூ.ஆர். (QR) பணப்பரிமாற்றங்களுக்கு நாளை (06) முதல் எவ்விதக் கட்டணமும் அறவிடப்படமாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. ஜனாதிபதியினால் நாளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ள இந்தத் திட்டத்தின் கீழ், பணம் அனுப்புபவர் அல்லது பெறுபவர் என இருவரிடமிருந்தும் மேலதிக ...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினரின் 2010 முதல் 2015 வரையான காலப்பகுதிக்குரிய சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான விபரங்களை சத்தியக்கடதாசி மூலம் சமர்ப்பிக்குமாறு கையூட்டல் ,ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு முன்னர் இந்தச் சொத்து ...
இலங்கையில் தங்கியிருந்து சர்வதேச ரீதியாக இணையவழி நிதி மோசடிகளில் ஈடுபட்டு வந்த 156 வெளிநாட்டவர்கள் சட்ட நடவடிக்கைகளின் பின்னர் அந்தந்த நாடுகளுக்கே திருப்பி அனுப்பப்படுவார்கள் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (03) சிலாபம் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் வைத்து இந்த 156 பேர் ...
மனிதன் ஒவ்வொருவரும் தனித்துவமானவன். அவனின் ஆற்றலும் ஆளுமையும் கூட தனித்துவமானவை தான். ஒவ்வொரு மனிதனுள்ளேயும் அவனுக்கே உரித்தான பல திறமைகள் புதைந்திருக்கின்றன. ஒருவன் போன்று இன்னொருவன் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அவ்வாறு இருக்கவும் முடியாது. எமது பழைய பதிவுகளைப் புரட்டிப் பார்ப்போமாக இருந்தால் பாரதியார் போன்று திருவள்ளுவர் ...
மகப்பேறு இன்மை என்பது, உலகலாவிய ரீதியிலும், இலங்கையிலும் குறிப்பாக வட மாகாணத்திலும் முக்கியமானதொரு பிரச்சனையாக பரிணமித்துக்கொண்டு வருகிறது. இந்த பிரச்சனை ஏற்படுவதை எவ்வாறு குறைத்துக்கொள்ளலாம் என்பதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இந்த மகப்பேறு இன்மை என்பது கிட்டத்தட்ட ஆறில் ஒரு தம்பதியினரைப் பாதிக்கும். திருமணமான பின்னர், எந்தவொரு ...