பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புலோலி தெற்குப் பகுதியில் காணாமல் போயிருந்த சிறுவன் ஒருவனின் சடலம், வீட்டின் அருகிலுள்ள கிணறு ஒன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் (12) இரவு இந்தச் சிறுவன் காணாமல் போயுள்ளதாகப் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. அதற்கமைய மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது ...
அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாக அவரது குடும்ப உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இன்று (12) முற்பகல் அவரது நலன் குறித்துக் கேட்டறிந்த பின்னர் ஊடகங்களிடம் பேசிய உறவினர்கள், அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதால் அவரது உயிருக்கு ...
உலகம் முழுவதும் வெப்பநிலையை அதிகரிக்கச் செய்வதற்கும், கடுமையான காலநிலை மாற்றங்களை ஏற்படுத்துவதற்கும் காரணமாக அமையும் ‘எல்-நினோ’ நிலை தற்போது தீவிரமடையத் தொடங்கியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தென்மேற்குப் பருவமழை குறைவடைவதற்கும் இந்த எல்-நினோ நிலைமையே காரணம் என்று அத்திணைக்களத்தின் எதிர்வுகூறல் பிரிவின் பணிப்பாளர் மெரில் மெந்திஸ் தெரிவித்துள்ளார். தற்போது ...
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து நேற்று (11) இரவில் அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரம் நோக்கிப் பயணத்தை ஆரம்பித்த விமானம் ஒன்று அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது. மின்னல் தாக்கியதன் காரணமாகவே இந்த விமானம் இவ்வாறு அவசரத் தரையிறக்கத்தை மேற்கொண்டுள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது. யு.எல். 606 (UL 606) ...
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்றைய தினம் (12) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அப்பகுதிகளின் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் ...
2025 ஆம் ஆண்டில் குழந்தை தொழிலாளர்கள் முறை தொடர்பாக சுமார் 516 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய குழந்தை பாதுகாப்பு அதிகாரம் தெரிவித்துள்ளது. ஜூன் 12 ஆம் திகதி அனுசரிக்கப்படும் “குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிரான சர்வதேச தினத்தை” முன்னிட்டு விடுத்துள்ள விசேட அறிக்கை ஒன்றில் அந்த அதிகாரம் இதனைத் ...
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டம், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நேற்று (11) பிற்பகல் நடைபெற்றது. கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் பலரின் பங்கேற்புடன் நடைபெற்ற இக்கூட்டத்தில், தற்போதைய அரசியல் சூழ்நிலை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடு மற்றும் அதன் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விரிவாகக் ...
மூன்று நாட்கள் நடத்தப்பட்ட விசேட டெங்கு ஒழிப்புத் திட்டத்தின் போது பரிசோதிக்கப்பட்ட 97,871 வளாகங்களில், 6,268 வளாகங்களில் டெங்கு நுளம்பு குடம்பிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. கடந்த 8ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டம் 14 மாவட்டங்களைச் சேர்ந்த 72 சுகாதார வைத்திய அதிகாரி (MOH) பிரிவுகளை உள்ளடக்கி முன்னெடுக்கப்பட்டு, ...
ஹம்பாந்தோட்டை, மிரிஜ்ஜவில பகுதியில் அமைந்துள்ள கடை ஒன்றிற்குள், அதன் உரிமையாளரான வயதான பெண் ஒருவர் அடையாளம் தெரியாத நபரால் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டவர் மிரிஜ்ஜவில, 100 அடி வீதி பகுதியில் “லீலா ஸ்டோர்ஸ்” என்ற கடையை நடத்தி வந்த ...
வடக்கிற்கான சர்வதேச வர்த்தக கண்காட்சியானது எதிர்வரும் 28,29 மற்றும் 30ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாச்சார மத்திய நிலையத்தில் காலை 9.00 தொடக்கம் மாலை 5.00 மணிவரை நடைபெறவுள்ளது. இது குறித்து தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.