வவுனியா மாநகர சபை மேயரின் உறுப்புரிமை நீக்கப்பட்டமைக்கு எதிராக வடக்கு மாகாண ஆளுநருக்கு ஏதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா பண்டாரவன்னியன் சதுக்கம் முன்னால் இன்று குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதுடன், அங்கிருந்து மன்னார் வீதி வழியாக ஊர்வலமாக சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் காமினி மகாவித்தியாலயம் முன்பாக நின்று கோசங்களையும் எழுப்பியிருந்தனர். ...
கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் T-56 ரக துப்பாக்கிகளால் சுட்டு ஐந்து நபர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத் தொடர் தொடர்பாக, பிள்ளையான் என்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்காக தற்போது (30) அழைத்துவரப்பட்டுள்ளார். கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் T-56 ரக ...
உயர் நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது குறித்து பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்டறிய இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய, எதிர்வரும் 4ஆம் திகதி இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது. உயர் நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் ...
நேற்று (29) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை திருத்துவதற்கு தீர்மானித்துள்ளது. இதன்படி 434 ரூபாயாக காணப்பட்ட 92 ரக ஒக்டேன் பெற்றோல் லீற்றரின் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 414 ரூபாவாகும். அத்துடன் 407 ...
யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, கொழும்பு உயர் மறைமாவட்டத்தின் துணை ஆயர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் அவர்கள், திருத்தந்தை 14ஆம் லியோ அவர்களால் நேற்று (29)நியமிக்கப்பட்டுள்ளார். 1966ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பிறந்த இவர், 2000ஆம் ஆண்டில் கொழும்பு மறைமாவட்டக் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். அதன் பின்னர் பல இடங்களிலும் ...
சுமார் 42 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கடத்த முயன்ற வெளிநாட்டுப் பெண் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரான இப்பெண் இன்று (29) அதிகாலை சீனாவின் குன்மிங் நகரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். ...
ளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 5 வயது சிறுமி ஒருவர், தொடர்ச்சியான தனிநபர் பரதநாட்டிய நிகழ்ச்சியால் உலக சாதனையை நிலைநாட்டினார். ஐந்தே வயதான நாட்டிய தாரகை ரஜீவன் ஹம்சத்வனி, 6 வயதிற்குட்பட்டோர் பிரிவில் 2 மணி 30 நிமிடங்கள் தொடர்ச்சியாக தனிநபராக பரதநாட்டியம் ஆடியுள்ளார். இந்த சாதனை முயற்சி நேற்று ...
கிளிநொச்சி நகரப் பகுதியில் 21 வயதுக்கு கீழ்ப்பட்ட சிறுவர்களுக்கு சட்டவிரோதமாக புகைப் பொருட்கள் விற்பனை செய்ததாக கூறப்படும் 13 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக பொலிஸார் சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். கிளிநொச்சி நகரில் உள்ள சில வர்த்தக நிலையங்களில் சிறுவர்களை இலக்கு வைத்து சிகரெட் மற்றும் பீடி உள்ளிட்ட புகைப் ...
மதிப்புமிக்க 2026 “SCO கோடைகால சமையல் கலைஞர்கள் போட்டியில்” இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய அணி வெள்ளிப் பதக்கத்தை வென்றது. ஜூன் 26-27 தேதிகளில் சீனாவின் கிங்டாவோவில் நடைபெற்ற இந்தப் போட்டியில், சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் அஜர்பைஜான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த திறமையான சமையல் கலைஞர்கள் பங்கேற்றனர். சீனாவின் ...
7 கோடியே 22 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஹசீஸ் மற்றும் குஷ் போதைப்பொருட்களை நாட்டிற்குள் கடத்த முற்பட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இன்று நேற்று (28) அதிகாலை வெளியேற முற்பட்ட போது, விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது ...