ஒரு வருடத்திற்கும் மேலாக நிறுத்தப்பட்டிருந்த வாகன இலக்கத் தகடுகள் அச்சிடும் பணிகள் இன்று (08) வேரஹெர மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள வளாகத்தில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தலைமையில் இந்த பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. இதன்போது கருத்துத் தெரிவித்த போக்குவரத்து மற்றும் ...
அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பல எதிர்க்கட்சிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டம் இன்று (08) கொழும்பு கோட்டை புகையிரத நிலைய வளாகத்தில் ஆரம்பமானது. இந்த சத்தியாக்கிரகப் போராட்டத்தில் எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி பெருமளவிலான பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர். குறித்த ...
யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 302 ஆக உயர்வடைந்துள்ளது. செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் 18 ஆவது நாளாக நேற்றும் (7) முன்னெடுக்கப்பட்டது. நேற்றய தினம் மாத்திரம் 06 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் ...
வவுனியா – ஓமந்தை நாவற்குளத்தில் கோயில் பூசை தொடர்பாக இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் ஒரு பிள்ளையின் தந்தை ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் அவரது தாயாரும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குளம் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றின் ...
யாழ்ப்பாணம் – புங்குடுதீவு கடற்பகுதியில் இருந்து கடற்றொழிலுக்காக சென்ற நிலையில் காணாமல் போன மீனவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். புங்குடுதீவு பகுதியை சேர்ந்த மூன்று மீனவர்கள் நேற்று முன்தினம் (5) கடற்தொழிலுக்கு சென்ற நிலையில் காணாமல் போயிருந்தனர். அவர்களை தேடும் பணிகள் நேற்று முதல் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் கடற்தொழில் ...
அம்பலாங்கொடை, போனதுவ பகுதியில் நடத்தப்பட்ட பேஸ்புக் விருந்து ஒன்றில் நடத்தப்பட்ட சோதனையில் 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 25 ஆண்களும் , 3 பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அம்பலாங்கொடை பொலிஸ் நிலைய மற்றும் அம்பலாங்கொடை பொலிஸ் விசேட அதிரடிப்படை உத்தியோகத்தர்கள் குழுவினர் இணைந்து மேற்கொண்ட சோதனையின் ...
காங்கேசன்துறை முதல் கல்பிட்டி வரையான கடல் பகுதிகளில் மறுஅறிவித்தல் வரும் வரை கடற்பயணங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. அத்திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், காங்கேசன்துறை முதல் மன்னார் ஊடாக கல்பிட்டி வரையான கடலோரத்திற்கு அப்பாலுள்ள கடல் பகுதிகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணிக்கு 60 முதல் 70 ...
கிளிநொச்சியில் வனவளத் திணைக்களத்தில் கடமையாற்றும் அதிகாரியொருவரின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. காணாமல் போயிருந்த வன அலுவலக ஊழியர் ஒருவரின் சடலம், அந்த அலுவலகத்திற்கு அருகிலுள்ள கிணறு ஒன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் கடந்த 05ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாகக் கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைவாக, ஜெயபுரம் பொலிஸார் மேற்கொண்ட ...
இலங்கையில் நிலவும் தற்போதைய பொருளாதாரப் பின்னணி மற்றும் டீசல் விலை அதிகரிப்பு அபாயம் காரணமாக, தனியார் பேருந்து சேவைகளை 50% இனால் குறைக்கத் தீர்மானித்துள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். நுகேகொடையில் இன்று (07) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு ...
நுரைச்சோலை, தழுவ முகத்துவாரப் பகுதியில் நீராடச் சென்ற மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இவ்விபத்தில் 18 மற்றும் 19 வயதுடைய இரண்டு இளம் பெண்களும், 24 வயதுடைய இளைஞர் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். நேற்று (06) மாலை 5:30 மணியளவில் இந்த அனர்த்தம் சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...