அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரிப்பினால் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இதனால் ஆகக்குறைந்த கட்டணம் 40 ரூபாவுக்கும் அதிகளவில் உயர்த்தப்படக்கூடும் என அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன நேற்று (20) ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். நாடு தற்போது பாரிய ...
நேற்று (20) நள்ளிரவு முதல் பால் தேநீரின் விலையை 5 ரூபாவினால் அதிகரிப்பதற்கு சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை அதிகரிப்பின் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ஹர்சன ருக்ஷான் தெரிவித்துள்ளார். இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலைகளை அதிகரிப்பதற்குத் ...
இம்முறை சிவனொளிபாதமலை யாத்திரை காலம் ஆரம்பிக்கப்பட்டது முதல் இதுவரையான காலப்பகுதியில், அப்பிரதேசத்திற்கு போதைப்பொருட்களைக் கொண்டு சென்ற 322 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹட்டன் பிரிவின் ஹட்டன், பொல்பிட்டிய, கினிகத்தேன மற்றும் நல்லதண்ணி ஆகிய பொலிஸ் நிலையங்களினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போதே, இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் ...
மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்டகால பிரச்சினையாக இருந்துவரும் மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரைக்காக, 1570 ஏக்கர் காணியினை விடுவிக்குமாறு மகாவலி அதிகார சபைக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார். மட்டக்களப்பு மாவட்ட விசேட அபிவிருத்தி குழுக் கூட்டம் நேற்று (20) காலை பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் ...
நாடு கடந்த காலத்தைப்போல மீண்டும் ஒருபோதும் ஒரு பொருளாதார நெருக்கடி நிலைக்கு தள்ளப்படுவதற்கு இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க உறுதியளித்துள்ளார். முழு நாடும் ஒன்றாக எனும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இலங்கை ...
இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனமும் 7 தமிழையும் சைவத்தையும் பேணிப்பாதுகாக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பிற சமயங்களின் இருப்பை எதிர்க்க நினைத்திலர். இதற்குக் காரணமும் உண்டு. அதாவது உலகில் ஒரே ஒரு சமயம் மட்டுமே இருக்குமாயின், அந்தச் சமயம் அழிந்து பல ஆயிரம் ...
இறக்குமதி செய்யப்பட்ட கீரி சம்பா (கீரி பொன்னி) அரிசியை நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்த முல்லேரியா பகுதியில் உள்ள பிரபல சூப்பர் மார்க்கெட் ஒன்றுக்கு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் கடந்த திங்கட்கிழமை (18) 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. நுகர்வோர் விவகார ...
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (20) முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைவாக, சுரேஷ் ...
சம்மாந்துறையில் 33 லீற்றர் கசிப்புடன் கைதான பெண் சந்தேக நபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை புறநகர் பகுதியான வீரமுனை 03 பகுதியில் செவ்வாய்க்கிழமை (19) மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது தன்வசம் வைத்திருந்த 33 ஆயிரம் மில்லி லீற்றர் கசிப்புடன் 40 வயதுடைய ...
திருகோணமலை – மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள 64 ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியில் நேற்றிரவு இவ் விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் மூதூர் -ஆணைச்சேனை பகுதியை சேர்ந்த 19 வயதுடைய றிஸ்வான் சிப்கி எனும் ...