எஹெலியகொட நகரில் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அடுத்தடுத்து பல வாகனங்களுடன் மோதி விபத்துக்குள்ளானதில், 13 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று இரவு 7 மணியளவில் எஹெலியகொட நகரின் பிரதான வீதியில் பயணித்துக் கொண்டிருந்த கார் ஒன்று, திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. கட்டுப்பாட்டை இழந்து ஓடிய ...
இணையவழி நிதி மோசடிகளைச் முன்னெடுப்பதற்காக இலங்கைக்கு வருகை தந்த 9 சீனர்கள் இன்று (16) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சீனப் பிரஜைகள் இன்று அதிகாலை 12:25 மணியளவில் சீனாவின் குன்மிங் நகரிலிருந்து ‘சைனா ஈஸ்டர்ன்’ ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான MU-6912 ரக விமானம் ...
திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள சோமாவதி பாலத்திற்குள் கீழ் குளித்துக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் மூவரின் சடலங்களும் நேற்று முன்தினம் (15) மீட்கப்பட்டுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல் போன மூன்று சகோதர்களும் சோமாவதி ...
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 8 வயதுடைய முகமது ஜிஹாட் பவிஹா என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்தவராவார். கடந்த 13ஆம் திகதி குறித்த சிறுமிக்கு வயிற்றுவலியுடன் கூடிய வாந்தி ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனை ஒன்றில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. எனினும், நேற்று அதிகாலை ஒரு மணியளவில் மீண்டும் கடும் ...
மன்னார், வங்காலைப்பாடு கடல் பகுதியில் இன்று அதிகாலை 4 மணியளவில் மீன்பிடிக்கச் சென்ற இரண்டு படகுகள் எதிர்பாராத விதமாக ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. வங்காலைப்பாடு மற்றும் காட்டாஸ்பத்திரி பகுதியைச் சேர்ந்த மீனவர்களின் படகுகளே இவ்வாறு விபத்திற்குள்ளாகின. இந்த மோதலில் படகுகள் பலத்த சேதமடைந்ததோடு, அதிலிருந்த மீனவர்கள் கடலில் தூக்கி வீசப்பட்டனர். இதில் காணாமல் ...
கடந்த 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் மாத்திரம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 36 பாரதூரமான வீதி விபத்துகள் பதிவாகியுள்ளன. இந்த விபத்துக்களில் சிக்கி இருவர் உயிரிழந்தனர். ஏப்ரல் 13ஆம் திகதி 19 விபத்துகளும், புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ஆம் திகதி 17 விபத்துகளும் பதிவாகியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் ...
திருகோணமலை – சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள சோமாவதி பாலத்திற்குள் கீழ் குளித்துக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல்போன மூன்று சகோதர்களும் சோமாவதி வீதி, ...
யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றிலிருந்து மனித என்புச் சிதிலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. நேற்று (14) தனது காணியைப் பார்வையிடச் சென்ற உரிமையாளர் இது குறித்து வழங்கிய தகவலின் பேரில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சம்பவ இடத்தில் உள்ள மரத்தில் நபர் ஒருவர் தூக்கிட்டதற்கான அடையாளங்கள் காணப்படுவதுடன், உடலை மிருகங்கள் கடித்துச் சிதைத்திருக்கலாம் ...
நாட்டில் கடந்த காலங்களுடன் ஒப்பிடும்போது, இந்த புத்தாண்டு காலத்தில் பட்டாசு விபத்துகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு மற்றும் பண்டிகைக் காலங்களில் அதிகளவான, வீதி விபத்துகள் மற்றும் பட்டாசுகளால் ஏற்படும் விபத்துகள் பதிவாகும் என சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். பொதுவாக ஒரு வருடம் ...
ஈரானுடனான போர் கிட்டத்தட்ட முடிவுக்கு வரும் தருவாயில் உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். பொக்ஸ் நியூஸிற்கு வழங்கிய நேர்காணலில் இதனைத் குறிப்பிட்ட அவர், அமெரிக்கா தற்போது பின்வாங்கினாலும் ஈரான் மீண்டும் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள 20 ஆண்டுகள் ஆகும் என்றும், ஈரான் ஒரு புதிய ஒப்பந்தத்தைச் ...