முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட சிலரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் பசந்த அமரசேன, குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் 7.8 மில்லியன் ரூபாய் பணத்தைப் பயன்படுத்தி, ஊவா மாகாண சபை தேர்தலுக்கான பிரச்சாரப் பணிகளை ...
சம்பளத்துடன் பதவி இடைநீக்கம் செய்யப்பட்ட சாரதிகள் தொடர்பில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது. குறித்த குழு அதன் தலைவர் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்னாயக்கவின் தலைமையில் கூடியபோதே இவ்விடயம் பற்றிக் கலந்துரையாடப்பட்டது. ...
முதற்தடவையாக humanoid எனப்படும் மனித ரோபோக்களை பயன்படுத்தி தமது தயாரிப்புகளை மேற்கொள்ள BMW நிறுவனம் தீர்மானித்துள்ளது. ஐரோப்பாவிலுள்ள கார் தயாரிப்பு தொழிற்சாலைகளில் இந்த ரொபோக்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் கோடைக் காலத்தில் Hexagon Robotics தொழில்நுட்பத்தில் உருவான இரு மனித ரோபோக்களை பயன்படுத்தி இந்த ...
ஜனவரி மாதத்தின் ஆரம்பம் முதல் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு மில்லியனைத் தாண்டியுள்ளது. இதற்கமைய, ஜனவரி முதலாம் திகதி முதல் நேற்று முன்தினம் (28) வரையான காலப்பகுதியில் வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,010,807 ஆகப் பதிவாகியுள்ளதாக இலங்கை ...
நுவரெலியா மாவட்ட மேல் நீதிமன்றத்தில் நேற்று (29) இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது, தனக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து கைதி ஒருவர் உயிரை மாய்க்க முற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடப்புசல்லாவ பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரை மாய்க்க முற்பட்டுள்ளார். கொலைச் சம்பவம் ...
பருத்தித்துறை முனை மற்றும் கற்கோவளம் பகுதிகளிலிருந்து கடற்றொழிலுக்காக கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புதன்கிழமை (27) இரவு சுமார் 11.00 மணியளவில் இரண்டு படகுகளில் கடலுக்கு சென்ற குறித்த மீனவர்கள் இதுவரை கரைக்கு திரும்பாத நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அந்தப் பகுதியில் நேற்று ...
இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனங்களும் 12 காஞ்சி காமகோடி பீடம் மற்றும் ஆதீனங்கள் என்பவற்றுக்கப்பால், இந்திய தேசத்தில் இருக்கக்கூடிய ஆன்மீகத் தலைவர்களின் ஆச்சிரமங்கள், அவர்களின் வழிபாட்டு ஸ்தலங்கள் என்பவற்றின் பலமும் விஸ்தீரணமும் உலகில் வேறு எந்தச் சமயங்களிலும் இல்லை என்று கூறுமளவில் வியாபகம் பெற்றுள்ளன. ஆம், மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள ...
சர்ச்சைக்குரிய கிரிஷ் கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை, வரும் ஜூலை 7 ஆம் திகதி (2026) விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (மே 29) தீர்மானித்துள்ளது. இலங்கையில் ரக்பி விளையாட்டை மேம்படுத்துவதற்காக ...
மொனராகலை – சியம்பலாண்டுவ பிரதான வீதியின் ‘திஸ் எகே ஹந்திய’ (31 சந்தி) பகுதியில் இன்று (29) மதியம் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த 26 பேர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மொனராகலை மற்றும் ...
உலக சந்தை நிலவரங்களின்படி, எதிர்காலத்தில் நாட்டில் மேற்கொள்ளப்படவுள்ள எரிபொருள் விலை திருத்தத்தின் போது, விலைக் குறைப்பை எதிர்பார்க்க முடியாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுடன் ஒப்பிடுகையில் தற்போது எரிபொருள் விலையில் ஓரளவு குறைவு காணப்படுகின்ற ...