40 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள ‘குஷ்’ போதைப்பொருளைக் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே கொண்டு சென்ற இரண்டு இலங்கை விமானப் பயணிகள், நேற்று அதிகாலை (30) விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர், படோவிட்டா பகுதியைச் சேர்ந்த 30 வயது ...
நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளை அதிகரிப்பதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. இந்த விலை அதிகரிப்பானது நாட்டின் எரிபொருள் சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த விலை திருத்தத்தின் பிரகாரம், எரிபொருள் வகைகளின் விலை அதிகரிப்பு விபரங்கள் பின்வருமாறு: * ...
ஹாங்காங்கில் தற்போது நடைபெற்று வரும் 22 ஆவது ஆசிய 20 வயதுக்குட்பட்டோருக்கான தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், பெண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் இலங்கையின் ரன்சினி பெரேரா தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். பெரேரா பந்தய தூரத்தை 24.07 வினாடிகளில் நிறைவு செய்து, முதலிடத்தைப் பிடிப்பதற்காக இந்த சிறப்பான திறமையை வெளிப்படுத்தியுள்ளார். ...
திருகோணமலை துறைமுகத்தின் Ashroff Jetty அதன் வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரே நேரத்தில் மூன்று கப்பல்கள் நங்கூரமிட்டு தங்களது செயல்பாடுகளை ஆரம்பித்துள்ளன. மன்னார் காற்று மின் உற்பத்தி நிலையத்திற்காக 5 காற்று மின் கோபுரங்களை ஏற்றிவந்த ‘AAL BANGKOK’ கப்பல், Ashroff Jetty யின் ஒரு பகுதியில் தனது இறக்குதல் ...
ஹங்கம, களமெட்டிய கடலில் நேற்று (30) மாலை நீராடச் சென்றபோது அலையில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போன பாடசாலை மாணவர்கள் மூவரின் சடலங்களும் இன்று (31) காலை மீட்கப்பட்டுள்ளன. இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் 12, 17 மற்றும் 18 வயதுடைய மூன்று பாடசாலை மாணவர்களே சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. ...
நேற்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு இணையாக, முச்சக்கர வண்டி கட்டணங்களையும் உயர்த்துவதற்கு எதிர்பார்ப்பதாக தேசிய ஒருங்கிணைந்த முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் தொழிலதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, கட்டண மீட்டர்களைப் பயன்படுத்தி இயக்கப்படும் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களிலுள்ள ...
பருத்தித்துறை கடலிலிருந்து மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன நான்கு மீனவர்களைத் தேடுவதற்கு இந்தியாவின் உதவியை நாடியுள்ள அதேவேளை, சர்வதேச கடலில் தேடுவதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளதாகக் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார். பருத்தித்துறை கடலில் மீன்பிடிக்கச் சென்று இதுவரை திரும்பாத நான்கு மீனவர்கள் தொடர்பாக எவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு ...
இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனங்களும் 14 தமிழகத்து சட்ட சபைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் அடைந்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலின் மற்றும் இந்து அறநெறித்துறை அமைச்சராக இருந்த சேகர்பாபு-திமுகவின் முக்கிய புள்ளிகளான பொன்முடி, திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா போன்றவர்களே காரணம் என்பதை தமிழகத்தின் மேன்மைமிகு அரசியல் ...
இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனங்களும் 13 மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெலாம் என உரைக்கப்பட்டாலும் உலகமெங்கும் சைவநீதி விளங்குவதற்கு தமிழகமே மூலாதாரமாக இருந்திருக்க வேண்டும். ஆம், பன்னிரு திருமுறை களையும் தந்தருளிய தென்னாடாகிய தமிழகமே உலக மெங்கும் சைவநீதி விளங்க வகை செய்திருத்தல் வேண்டும். ஆனால் பிராமணர் ...
சட்டவிரோதமான முறையில் 31,380,000 ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை நாட்டுக்குள் கொண்டு வந்த 18 சீன மற்றும் இலங்கை பயணிகள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். டுபாய் மற்றும் மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து இன்று (30) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்த குறித்த சந்தேகநபர்கள், ...