கீரி சம்பா அரிசியை நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்த குற்றத்தை ஒப்புக்கொண்ட திருகோணமலை பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவருக்கு, திருகோணமலை நீதிவான் நீதிமன்றம் கடந்த (24) ஆம் திகதி 100,000 ரூபா அபராதம் விதித்துள்ளது. நுகர்வோரை அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் இவ்வாறான சட்டவிரோத ...
காணி தகராறு ஒன்றில் பெண்களை துப்பாக்கியை கட்டி மிரட்டியமைக்காக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் இளவாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தின் பெரியவிலன் பகுதியில், நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா இரண்டு பெண்களைத் துப்பாக்கியால் மிரட்டிய சம்பவம் தொடர்பாக இது நிகழ்ந்துள்ளது. நிலத்தகராறின் காரணமாக இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகவும், ...
எரிசக்தி சவால்களுக்கு மத்தியில் அரச சேவையை முறையாக முன்னெடுத்துச் செல்வதற்காக, டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் அரச நிர்வாக அமைச்சுக்கள் இணைந்து தொலைதூர சேவை முறைமை தொடர்பான புதிய வழிகாட்டல்களை அறிமுகப்படுத்தியுள்ளதாக அவ்வமைச்சுக்கள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள அமைதியற்ற சூழ்நிலை மற்றும் அதன் உலகளாவிய ...
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் இன்றைய தினம் யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இதுவரையில் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 240 மனித என்புக்கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 239 ...
தெற்கு லெபனானில் களப்பணியில் இருந்த இஸ்ரேலிய மீட்பு ஹெலிகாப்டர் ஒன்றை ஹிஸ்புல்லா அமைப்பின் தற்கொலை படை ஆளில்லா விமானம் குறிவைத்துத் தாக்கியுள்ளது. காயமடைந்த வீரர்களை மீட்கச் சென்ற இடத்தில் இந்தத் தாக்குதல் அரங்கேறியுள்ளது. எல்லையோரப் பகுதியில் காயமடைந்த இஸ்ரேலிய வீரர்களை ஏற்றிச் செல்வதற்காக ஹெலிகாப்டர் தரைமட்டத்திற்கு அருகே வந்தபோது ...
ஜப்பானின் வடக்கு பகுதியில் ஹொக்கைடோவில் இன்று (27) அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி 6.2 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் கூற்றுப்படி, நிலநடுக்கத்தின் மையப்புள்ளி சரபெட்சு நகருக்கு மேற்கே 18 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருந்தது. மேலும் ...
தம்புள்ளை – மாத்தளை பிரதான வீதியின் நாவுல, நாலந்த பகுதியில் இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி பாரிய விபத்துக்குள்ளாகியுள்ளன. இன்று (26) காலை 9.20 மணியளவில் தனியார் பேருந்து ஒன்றும், இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்றும் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. விபத்தில் காயமடைந்த ...
பெலியத்தையிலிருந்து மருதானை நோக்கிப் பயணித்த போது கடந்த 24ஆம் திகதி தடம் புரண்ட ‘சாகரிக்கா’ புகையிரதத்தில் பணியாற்றிய ஊழியர்கள் பணிக்கு சமூகமளிக்க முடியாதவாறு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, குறித்த புகையிரதத்தின் சாரதி, காப்பாளர், உதவிச் சாரதி மற்றும் உதவிப் புகையிரத காப்பாளர் ஆகியோருக்கே இந்த தடையை விதிக்க புகையிரத திணைக்களம் ...
தற்போதைய அமைச்சர்கள் மீது எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் சொத்துக் குற்றச்சாட்டுக்கள் வேடிக்கையானவை. பில்லியன் கணக்கில் நாட்டைச் சூறையாடியவர்களுடன் ஒப்பிடுகையில் இவை ஒரு பாரிய மோசடியே அல்ல என்று முன்னாள் அமைச்சரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு ...
யாழில் அதிகரித்துவரும் போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பொலிஸார் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கைகளின்போது கடந்த 48 மணித்தியாலங்களில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் தலைமையக போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், நகரின் பல்வேறு பகுதிகளில் சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டன. கடந்த இரண்டு நாட்களாக ...