ரஷ்ய கூட்டமைப்பின் சுகாதார அமைச்சர் மிஹைல் முராஷ்கோ (Mikhail Murashko) தலைமையிலான பிரதிநிதிகள் குழு, மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு எதிர்வரும் மே மாதம் 03 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளது. இந்த விஜயத்தின் போது, ரஷ்ய சுகாதார அமைச்சர் உள்ளிட்ட குழுவினர், இலங்கையின் சுகாதார ...
தொலைபேசி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் மூலம் பொதுமக்களுக்குத் தொடர்ச்சியாகத் தொல்லை கொடுப்பவர்களுக்கு எதிராக, அண்மையில் திருத்தப்பட்ட தொலைத்தொடர்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் அறிவித்துள்ளனர். கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் வழக்கு நடவடிக்கைகள் பிரிவின் பொறுப்பதிகாரியும், சட்டத்தரணியுமான திலன் குமார இது தொடர்பில் தெரிவிக்கையில், ...
பங்களாதேஷில் தட்டம்மை நோயின் பிடியில் சிக்கி கடந்த மார்ச் மாதம் 15 முதல் 259 பேர் தட்டம்மை அறிகுறிகளுடன் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களில், 91 சதவீதம் பேர் 01 – 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களாவர். இந்த சுகாதார நெருக்கடிக்கு முன்னாள் இடைக்கால அரசே காரணம் என பங்களாதேஷ் ...
நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதாவது, இலங்கை சந்தையில் கிடைக்கும் பல தோல் கிரீம்கள் மற்றும் லோஷன்களில் ஆபத்தான அளவில் கன உலோகங்கள் இருப்பது ஆய்வக சோதனைகளில் தெரியவந்ததை அடுத்து, நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. சோதனை செய்யப்பட்ட ...
அமெரிக்க பிரஜைகளின் கடவுச்சீட்டுகளில் அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் படம் அச்சிடப்படவுள்ளது. அரசாங்க நிறுவனங்களில் தனது தனிப்பட்ட முத்திரையைப் பதிக்கும் ட்ரம்ப்பின் அதிரடி நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இது பார்க்கப்படுகிறது. அமெரிக்கா சுதந்திரம் பெற்று 250 ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கும் வகையில், இந்த ‘லிமிடெட் எடிஷன்’ கடவுச்சீட்டுகள் வெளியிடப்படவுள்ளதாக ...
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அனைத்து நிர்வாக நடவடிக்கைகளும் இன்று (29) முதல் தற்காலிகமாக இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது. 1973 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க விளையாட்டுச் சட்டத்தின் 31 மற்றும் 34 ஆம் பிரிவுகளின் கீழ் ...
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா இன்று (29) முதல் அமுலுக்கு வரும் வகையில் தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார். அவருடன் இணைந்து, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஏனைய உத்தியோகபூர்வ அதிகாரிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களும் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானம் குறித்த ...
கோதுமை மாவின் விலையை இன்று (29) முதல் அதிகரிப்பதற்கு ப்ரீமா நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, ப்ரீமா நிறுவனத்தின் கோதுமை மா ஒரு கிலோகிராமின் விலையை 5 ரூபாவினால் அதிகரிப்பதற்கு அந்நிறுவனம் தீர்மானித்துள்ளது. போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்துள்ளமையே இந்த விலை உயர்விற்கான காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை ...
அமெரிக்காவுடன் தற்காலிக போர்நிறுத்தம் ஏற்பட்டிருந்தாலும், மேற்காசியாவில் இன்னும் போர் நீடிப்பதாக ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் இடையேயான போர் நிறுத்தம் மே 1ம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. போரை நிரந்தரமாக நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தையில் முரண்பாடுகள் ஏற்பட்டு வருகின்றன. அதாவது, போர் நிறுத்த ஒப்பந்தத்தில் அமெரிக்காவின் ...
உகாண்டாவின் வடக்குப் பகுதிகளில் சட்டவிரோதமாக வெளிநாட்டினர் வசித்து வருவதாக அந்நாட்டு உளவுத்துறை அரசுக்கு தகவல் வழங்கிய நிலையில், நாட்டின் வடக்குப் பகுதிகளில் சட்டவிரோதமாக வசித்து வருபர்களை கைது செய்யும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டனர். இதன்போது நைஜீரியா நாட்டைச் சேர்ந்த 62 கைது செய்யப்பட்டுள்ளனர்.தலைநகர் கம்பாலா அருகில் உள்ள ஒரு ...