தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பின்னதுவ நுழைவாயிலுக்கு அருகில் நேற்று (08) மாலை இடம்பெற்ற பேருந்து விபத்தொன்றில் சுமார் 10 பேர் காயமடைந்துள்ளனர். கொழும்பில் இருந்து காலி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பேருந்து ஒன்று, பின்னதுவ நுழைவாயிலின் பாதுகாப்புப் பக்க வாயிலையும் உடைத்துக் கொண்டு சென்று அருகில் இருந்த தூண் ...
2026ஆம் ஆண்டுக்குரிய தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் மாதம் 09ஆம் திகதி நடைபெறும் என இலங்கை பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, பரீட்சையின் இரண்டாம் பகுதி வினாத்தாள் அன்றைய தினம் முற்பகல் 09.30 மணி முதல் 10.45 மணி வரை நடத்தப்படும். முதலாம் பகுதி வினாத்தாளை ...
2026ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி ஆரம்பமாகும் என இலங்கை பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையொன்றில், இப்பரீட்சை செப்டம்பர் மாதம் 05ஆம் திகதி வரை நடைபெறும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. உயர்தரப் பரீட்சைக்கான கால அட்டவணையும் பரீட்சைத் திணைக்களத்தினால் ...
மறு அறிவித்தல் வரும் வரை ஈரானுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறும், தற்போது ஈரானில் வசிக்கும் இந்தியர்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறும் அறிவுறுத்தி இந்தியா புதிய பயண ஆலோசனையை விடுத்துள்ளது. இந்திய வெளியுறவு அமைச்சகத்துடன் ஒருங்கிணைந்து, டெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் இந்த அவசர ஆலோசனையை வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் ...
அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் தனது சட்டபூர்வ வருமானத்தை மிஞ்சிய வகையில் 75 மில்லியன் ரூபாவிற்கும் அதிக சொத்துக்களை சட்டவிரோதமான முறையில் ஈட்டியமை தொடர்பில், முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு நேற்று (08) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு ...
வெளிநாடு ஒன்றில் அச்சிடப்பட்ட 60 கட்டு போலி 100 டொலர் நோட்டுகளுடன் (700,000 டொலர்) இலங்கை பெண் ஒருவரை மத்திய குற்றப்புலனாய்வு பணியகம் கைது செய்துள்ளது. நேற்று (08) முற்பகல் கொட்டிகாவத்தை பகுதியில் அமைந்துள்ள 53 வயதுடைய சந்தேக நபரான பெண்ணின் வீட்டில் வைத்தே அவர் இவ்வாறு கைது ...
எத்தியோப்பியாவில் கடத்தப்பட்டிருந்த மூன்று இலங்கையர்கள் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளனர். வேலைவாய்ப்புகளுக்காக எதியோப்பியா சென்றிருந்த போதே இந்த மூன்று இலங்கையர்களும் அங்கு கடத்தலுக்கு உள்ளாகியிருந்தனர். இக்கடத்தல் சம்பவம் தொடர்பாக இலங்கை தூதரகம் அங்குள்ள போலே (Bole) துணை நகர பொலிஸ் திணைக்களத்திற்கு முறைப்பாடு செய்ததை அடுத்து, கடந்த மே 26ஆம் திகதி ...
ஒரு வருடத்திற்கும் மேலாக நிறுத்தப்பட்டிருந்த வாகன இலக்கத் தகடுகள் அச்சிடும் பணிகள் இன்று (08) வேரஹெர மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள வளாகத்தில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தலைமையில் இந்த பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. இதன்போது கருத்துத் தெரிவித்த போக்குவரத்து மற்றும் ...
அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பல எதிர்க்கட்சிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டம் இன்று (08) கொழும்பு கோட்டை புகையிரத நிலைய வளாகத்தில் ஆரம்பமானது. இந்த சத்தியாக்கிரகப் போராட்டத்தில் எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி பெருமளவிலான பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர். குறித்த ...
பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தில் 129 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பிலிப்பைன்ஸில் இன்று (8) காலை 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவானது. இந்த நிலநடுக்கம் 10 கி.மீ கடல் ஆழத்தில் ஏற்பட்டதாக ஜேர்மனிய புவியியல் ஆய்வு ...