மெக்சிகோவில் பயணிகள் பேருந்து ஒன்று வீதியை விட்டு விபத்துக்குள்ளானதில் சுமார் 11 பேர் உயிரிழந்தனர். சம்பவத்தில் 32 பேர் வரை காயமடைந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விபத்து இடம்பெற்ற போது பேருந்தில் 41 பேர் பயணித்தனர். அவர்களில் ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஏனைய ஐந்து ...
தாய்லாந்திலிருந்து குஷ் மற்றும் ஹேஷ் போதைப்பொருட்களை நாட்டிற்கு கடத்தி வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 22 பிக்குகள் இன்று (2) மீண்டும் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். குறித்த பிக்குகள் கடந்த ஏப்ரல் 25ஆம் திகதி நாட்டிற்கு வருகை தந்தபோது, 112 கிலோகிராம் குஷ் மற்றும் ஹேஷ் ...
வலுசக்தி துறையில் ஒருவித நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட மே தினப் பேரணையில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், “வலுசக்தி துறையில் ஒரு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எரிபொருள் விலை பாரிய ...
2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 25,082 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. டெங்கு நோய் காரணமாக இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அந்தப் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் பிரஷிலா சமரவீர வெளிப்படுத்தியுள்ளார். கொழும்பு, கம்பஹா, மாத்தறை, காலி, இரத்தினபுரி, களுத்துறை ...
வவுனியா வடக்கு பிரதேசத்தில் வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் புதிய வீட்டுத்திட்டப் பணிகளை, பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணவேணி திருநாவுக்கரசு அவர்கள் நேரடியாகச் சென்று பார்வையிட்டார். வவுனியா வடக்கு பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட மூன்று வாழ்வாதார நிலையில் பின்தங்கிய குடும்பங்களுக்கு தலா ...
செவனகல – கட்டுப்பில வாவி பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை நண்பர்களுடன் நீராடச் சென்ற 16 வயது சிறுவன் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான். உயிரிழந்த சிறுவன் இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவன் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவனது உடல் தற்போது எம்பிலிபிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் ...
நேற்றயதினம் யாழில், கறிவேப்பிலை பறிப்பதற்காக மரத்தில் ஏறியவர் தவறி கீழே விழுந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது காங்கேசன்துறை வீதி, நாச்சிமார் கோவிலடியை சேர்ந்த இராசதுரை பகவான்தாஸ் (வயது 64) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் கறிவேப்பிலை பறிப்பதற்கு சென்று மரத்தில் ...
அம்பாந்தோட்டை, சூரியவெவ பிரதேசத்தில் நேற்று இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் சண்டையாக மாறியுள்ளது. இந்த மோதல் முற்றிய நிலையில், கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் சூரியவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய ...
குருநாகல், கல்கமுவை பிரதேசத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். கல்கமுவை பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த ஹயஸ் வாகனமும், மோட்டார் சைக்கிளும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தின் போது மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற பெண்ணே ...
இந்த வருட இறுதிக்குள் முக்கிய புள்ளிகள் பலர் சிறையில் அடைக்கப்படுவார்கள். எந்தவொரு தராதரமும் பாராமல் சட்டம் அனைவருக்கும் சமம் என்ற அடிப்படையில் நடைமுறைப்படுத்துவோம் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நுவரெலியாவில் நேற்று இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் மேதின கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் இந்த ...