உலகளாவிய எரிசக்தி சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் இன்று (10) சற்று அதிகரித்துள்ளன. அதற்கமைய, இன்று காலை 6.40 மணி அளவில், WTI கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 88.95 அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளதுடன், இது 0.85 சதவீத வளர்ச்சியாகும். ப்ரெண்ட் (Brent) ரக கச்சா எண்ணெய் ...
டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு, வெளிநாட்டவர்கள் அமெரிக்காவில் வேலை செய்வதற்கான H-1B விசா கட்டணத்தை 100,000 டாலர் (சுமார் ரூ.83 லட்சம்) என்ற அளவில் உயர்த்தியிருந்தது. அமெரிக்கர்களுக்கு உள்நாட்டில் அதிக வேலைகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக மேற்கொள்ளப்பட்ட இந்த நகர்வு அமெரிக்காவில் தங்கி வேலை செய்யும் வெளிநாட்டவர்களுக்கு, குறிப்பாக ...
பிலிப்பைன்ஸின் தெற்குப் பகுதியான மிண்டானாவோ (Mindanao) தீவுக்கு அப்பால் ஏற்பட்ட சக்திவாய்ந்த 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளதாக பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திடீர் மரண விசாரணை பரிசோதகர்கள் தமது கடமைகளை நிறைவேற்றுவதற்கான இலஞ்சம் அல்லது வேறு வரப்பிரசாதங்களை கோரினால் அது குறித்து உடனடியாக அறிவிக்குமாறு நீதித்துறை மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இதற்கமைய அமைச்சின் 0702724637 என்ற வட்ஸ்அப் இலக்கத்திற்கு அல்லது இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ...
பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து விற்பனை செய்வதற்காகத் தயார்படுத்தி வைக்கப்பட்டிருந்த, கஞ்சா கலந்த 3,755 மதனமோதக மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆயுர்வேத திணைக்களத்தின் எவ்வித அனுமதியோ அல்லது உரிமமோ இன்றி, நுவரெலியா பழைய கடை வீதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து ...
ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்த நான்கு வழக்குகளிலும் குற்றவாளியாகக் காணப்பட்ட முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு, வழக்கு ஒன்றுக்கு நான்கு ஆண்டுகள் வீதம் மொத்தம் 16 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹாயில் இந்தத் தீர்ப்பை ...
சிலாபத்திலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த ரயிலுடன் முச்சக்கர வண்டி ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இன்று (09) காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கப்புவத்தை மற்றும் கந்தானை ஆகிய நிலையங்களுக்கு இடைப்பட்ட ரயில் கடவையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனமும் 19 திருக்கோணேஸ்வரர் ஆலயத்தை புனரமைத்துத் தருமாறு சிவபூமி அறக்கட்டளையின் ஸ்தாபகர் கலாநிதி ஆறு.திருமுருகன் இந்திய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஊடாக விடுத்த கோரிக்கையை இந்திய மத்திய அரசு ஏற்றுக்கொண்டது. ஆலய நிர்மாணம் தொடர்பான விபரங்களை ஆலய பரிபாலன சபையிடம் இலங்கைக்கான ...
அதிகரித்துள்ள எரிபொருள் விலை காரணமாக நாடு தழுவிய ரீதியில் தனியார் பேருந்து இயக்கம் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகியிருப்பதாகவும், பேருந்து உரிமையாளர்களின் நஷ்டத்தைக் குறைப்பதற்காக பேருந்து பயணத் தடவைகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். இதன் காரணமாகப் ...
நிலவும் கடுமையான டெங்கு அபாயத்தைக் கருத்திற்கொண்டு, மாத்தறை மாவட்டத்தின் அத்துரலிய சுகாதார அதிகாரி பிரிவிற்குட்பட்ட சுமார் 300 வீடுகள் மற்றும் அரச நிறுவனங்கள் நேற்று (08) பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இதன்போது, நுளம்பு குடமிகள் காணப்பட்ட சூழலைப் பேணி வந்த 19 பேருக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு, நீதிமன்றில் விபரங்களை ...