ஜப்பானின் சிபா மாகாணத்தில் இன்று (26) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது 5.8 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக அந்தநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இது டோக்கியோவிற்கு அருகிலுள்ள பகுதிகளை உலுக்கிய போதிலும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என ஜப்பானிய அதிகாரிகளும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையமும் ...
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினரான ‘கெஹெல்பத்தர பத்மே’ என்பவரின் துப்பாக்கிதாரியாகச் செயற்பட்டதாகக் கூறப்படும் “மாட்டியா” எனப்படும் போம்புவல தேவகே சுரங்க சஞ்சீவ கருணாரத்ன கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மலேசியாவில் தங்கியிருந்த போது அந்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவினரால் கைது ...
உயிர்க்கொல்லி டெங்கு நோயின் காரணமாக இந்த ஆண்டில் இதுவரை பதிவான மரணங்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது. சுகாதாரத் துறையினர் உறுதிப்படுத்தியுள்ளபடி, இதுவரை நாடளாவிய ரீதியில் பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சுமார் 49,000 ஆக பதிவாகியுள்ளது. தற்போது நாட்டின் 14 மாவட்டங்களில் டெங்கு நோய் தீவிரமாகப் ...
அண்மையில் வௌியான 2025 (2026) கல்வி பொது தராதர சாதாரண பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான மீள் பரிசீலனைக்கான விண்ணப்பங்கள் நேற்று (25) முதல் கோரப்பட்டுள்ளன. பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மீள் பரிசீலனைக்கான விண்ணப்பங்களை எதிர்வரும் ஜூலை 8 ...
வெனிசுலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களினால் குறைந்தது 188 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த அனர்த்தங்களினால் 1,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. கராகஸ்மற்றும் லா குவைரா மாநிலங்களில் 100-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது அங்குள்ள இடிபாடுகளுக்குள் மீட்புப் பணியாளர்கள் ...
இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனங்களும் 27 இந்து சமயக் கொள்கைகளுடன் இணைந்து செல்லக்கூடிய பெளத்தமும் நம் சைவமும் முட்டி மோதிக் கொள்வதன் சூக்குமம் இன்னமும் புரியாத புதிராகவே உள்ளது. பெளத்த விகாரைகளில் இந்துக் கடவுள்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடைபெறுகிறது. இவ்வாறான நிலையில் தமிழர்களில் பெளத்தர்கள் இல்லாத வெற்றிடமும் ...
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராகத் தொடரப்பட்ட ‘கிரிஷ்’ (Krrish) பரிவர்த்தனை தொடர்பான வழக்கில், இரண்டு இந்திய சாட்சிகளுக்கு அழைப்பாணை அனுப்புமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (25) உத்தரவிட்டது. அதன்படி, வெளிநாட்டுச் சாட்சிகளுக்கான நீதிச் சேவை ஆணைக்குழுவின் நடைமுறைக்கு இணங்க அழைப்பாணையை அனுப்புமாறு கொழும்பு மேல் நீதிமன்ற ...
பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) இந்த ஆண்டுக்குள் இரத்து செய்யப்படும் என்று ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்று (25) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். 1979 இல் ஓராண்டு காலத்திற்கான தற்காலிக நடவடிக்கையாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்தச் சட்டம், அதனை இரத்து செய்ய வேண்டும் என்ற நீண்டகாலக் கோரிக்கைகள் இருந்தபோதிலும், சுமார் 46 ...
இந்திய கடவுச்சீட்டை பயன்படுத்தி நாட்டுக்கு வர முயன்ற இலங்கை பெண்ணொருவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை விமான நிலையத்தில் நேற்று முன்தினம் (23) பெண் ஒருவர் இலங்கை வருவதற்கு முயன்றார். அவரது கடவுச்சீட்டை விமான நிலையத்தில், வெளிநாட்டவர் பதிவு மண்டல அலுவலர் ஆய்வு செய்தார். அப்போது, அந்த பெண் ...
இலங்கையில் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கும், அரசாங்கத்தால் கொண்டுவரப்பட உள்ளதாகக் கூறப்படும் ஊடக சாசனத்தை நிறுத்துவதற்கும் சர்வதேச அழுத்தங்களை வழங்குமாறு ஜேர்மன் துணை தூதுவர் சாரா கசல்பார்திடம் மட்டக்களப்பு ஊடகவியலாளர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர். நேற்று (24) மாலை மட்டக்களப்பு ஊடக அமையத்திற்கு விஜயம் செய்த ஜேர்மன் ...