யாழில் கொரோனாவால் இருவர் உயிரிழந்ததுடன் யாழ். மாவட்டத்தில் 20 பேர் உட்பட வடக்கில் 28 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி நேற்று 707 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் யாழ். மாவட்டத்தில் 20 பேருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவருக்கும், ...
கொரோனாத் தொற்றுக் காலத்தில் வெசாக் தேசிய நிகழ்வை நயினாதீவில் நடத்துவதற்கு பலதரப்புகளும் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. கொரோனாத் தொற்று தென் பகுதியில் மிக மோசமாக பரவி வருகின்ற இவ்வேளையில், எதிர்வரும் மே 23 ஆம் திகதி தொடக்கம் 28 ஆம் திகதி வரையான ஒரு வார காலத்திற்கு ...
2020ஆம் ஆண்டில் நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று முன்தினம் (04) வெளியாகின. பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகும் போதெல்லாம் அதன் மீதான கவனயீர்ப்பு எம்மிடம் உச்சமாக இருக்கும். அந்தளவுக்கு கல்வி மீது நம் தமிழ் மக்கள் பற்றும் அளவற்ற கரிசனையும் கொண்டவர்கள். ஒரு காலத்தில் இலங்கைத் தீவில் ...
வவுனியா நகர சபை சுகாதார பரிசோதகருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வவுனியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் அதனை கட்டுப்படுத்துவதற்கு சுகாதார பிரிவினரால் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த வவுனியா நகர சபையின் ...
நாட்டில் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்குமாயின் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படும் நிலையேற்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய கலாநிதி அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில், கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை மேலும் தீவிரமாக அதிகரிக்குமாயின் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படும். அது ...
யாழ்.பல்கலைக்கழக பெண் விரிவுரையாளர் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலேயே குறித்த தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவருக்கு நேற்று முன்தினம் பிசிஆர் மாதிரிகள் பெறப்பட்டிருந்த நிலையில் நேற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்.பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்தில் கடமையாற்றும் விரிவுரையாளரே ...
யாழ்ப்பாணம் நகரில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 30 பேர் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு கடும் எச்சரிக்கையின் பின் விடுவிக்கப்பட்டனர். முகக்கவசம் அணியாதோர், சமூக இடைவெளியைப் பேணாதவர்களை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில் யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ...
யாழ்.மாவட்டத்தில் 38 பேர் உட்பட வடக்கில் 44 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப் படுத்தப்பட்டிருப்பதாக யாழ். போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி நேற்றைய தினம் 727 பேருக்கு நடத்தப்பட்ட பி.சி. ஆர் பரிசோதனையில் யாழ். மாவட்டத்தில் 38 பேருக்கும், வவுனியா மாவட்டத்தில் 3 பேருக்கும், கிளிநொச்சி மாவட்டத்தில் ...
யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டியை வாடகைக்கு அமர்த்தியவர்கள் சாரதிக்கு மயக்க மருந்து கலந்த குளிர் பானத்தை வழங்கி தங்கச் சங்கிலியை அபகரித்துச் சென்றுள்ளார். ஆனைக்கோட்டை பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வாடகைக்கு அமர்த்திய முச்சக்கர வண்டியில் ஒருவர் சாவகச்சேரிக்கு பயணித்துள்ளார். அவ்வாறு பயணித்தவர்கள் சாவகச்சேரி சந்தியில் ஓர் பைக்கேற் குளிர்பானம் அருந்தியுள்ளனர். ...
கொடிகாமம் வடக்கு மற்றும் கொடிகாமம் மத்தி ஆகிய இரண்டு கிராம சேவகர் பிரிவுகளுமே நேற்றிரவு முதல் மறுஅறிவித்தல் வரை முடக்கப்படுகிறது. அதனடிப்படையில் இரண்டு கிராம சேவையாளர் பிரிவுகளையும் சேர்ந்த மக்கள் வெளியில் செல்வதற்கோ அல்லது வெளியில் உள்ளவர்கள் அந்தக் கிராமங்களுக்குச் செல்வதற்கோ அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று மருத்துவர் ஆ.கேதீ ஸ்வரன் ...