டீசல் விலை அதிகரிக்கப்பட்டமைக்கு நிகராகப் பேருந்து கட்டணங்களை அதிகரிப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்று (04) காலை நெடுஞ்சாலைகள் அமைச்சில் நடைபெற்றது. எவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பாகப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவுடன் விரைவில் கலந்துரையாடல் ஒன்றிற்கு ஏற்பாடு செய்து தருவதாக அமைச்சரின் தனிப்பட்ட செயலாளர் பேருந்து சங்கங்களின் ...
அரசாங்கத்திற்கு எதிராகத் தமிழ் மக்கள் செயற்படுகிறார்கள் என்ற சந்தேக மனப்பாங்குடன் நுணுகி நுணுகி ஆராய்வதே அரச புலனாய்வுத் துறையின் பணியாக உள்ளது. அதாவது தமிழ் மக்களை எதிரிகளாகவும் அவர்கள் இந்த நாட்டின் பிரஜைகள் அல்ல என்பது போலவுமே புலனாய்வுத்துறையின் செயற்பாடுகள் அமைகின்றன. உண்மையில் தமிழ் மக்களை எதிரிகளாகப் பார்க்காமல், ...
குவைத் சர்வதேச விமான நிலையத்தின் மீது ஈரான் நடத்திய தாக்குதலில், அங்கு பணியாற்றி வந்த மூன்று இலங்கையர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த மூவரும் சிறிய அளவிலான காயங்களுக்கு உள்ளாகியிருப்பதுடன், அவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் குவைத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட மூவரும் ஆண்கள் என்றும், அவர்கள் அங்கு ...
ஹொரணை, கல்பாத பகுதியில் உள்ள முதியோர் பராமரிப்பு இல்லம் ஒன்றில் நேற்று (3) பிற்பகல் ஏற்பட்ட திடீர் தீ விபத்தின் போது, அங்கு 72 முதியவர்கள் தங்கியிருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தீ விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன் உடனடியாகச் செயற்பட்ட நிவாரணச் சேவையினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து மேற்கொண்ட ...
இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் நடாத்தப்படும் பரீட்சைகளுக்கு விண்ணப்பிக்கும் போது, தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உட்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. 2026 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடாத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள 2026 க.பொ.த (சாதாரண தர) பரீட்சைக்கு விண்ணப்பிக்க எதிர்பார்க்கும் விண்ணப்பதாரர்களின் தேசிய அடையாள அட்டைகளைத் ...
ஹொரணை நகரிலுள்ள அரசு வங்கி ஒன்றின் ATM இயந்திரங்களில் வைப்பு செய்வதற்காகக் கொண்டு செல்லப்பட்ட 3.05 கோடி ரூபாய் பணம் யாரோ ஒருவரால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (3) பிற்பகல் 2.55 மணியளவில், வங்கி ஊழியர் ஒருவர் வங்கியின் பின் கதவினால் தனது இரு கைகளிலும் இரண்டு ...
ஹிக்கடுவ மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடி நடவடிக்கைக்காகச் சென்ற படகில் இருந்த மீனவர் ஒருவர் காணாமல் போன சம்பவம் தொடர்பாகக் கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய, விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக ஹிக்கடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த படகு ஹிக்கடுவ மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடி நடவடிக்கைக்காக நேற்று (02) புறப்பட்டுச் சென்றுள்ளதுடன், பின்னர் அதில் ...
மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றக் கட்டமைப்பின் நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பதற்கு எடுக்கப்படவுள்ளதாகக் கூறப்படும் நடவடிக்கைகள் குறித்து, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. இந்தத் தருணத்தில் நீதிமன்றங்களில் தற்போது சேவையாற்றி வரும் நீதியரசர்களின் ஓய்வு ...
குவைத்தின் சர்வதேச விமான நிலையத்தை இலக்கு வைத்து ஈரான் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை இன்று (3) நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதல்களில் சிலர் காயமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. தற்போது விமான நிலையம் மூடப்பட்டுள்ளதுடன், குறித்த விமான நிலையத்திற்கு வந்த விமானங்களும் வேறு இடங்களுக்கு திருப்பிவிடப்பட்டுள்ளன. இந்தத் ...
இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனங்களும் 16 இங்குதான் விஜய்க்கு எதிராகப் பிரசாரம் செய்தவர்கள், அதிலும் குறிப்பாக திராவிட முன்னேற்றக்கழகம் சார்ந்த கத்தோலிக்கர்கள் சிலர், ஜோசப் விஜய் என விஜயின் பெயரை கூறத்தலைப்பட்டனர். இவ்வாறு ஜோசப் விஜய் எனக் கூறுவதனூடாக விஜய் ஓர் கத்தோலிக்கர் என்பதை தமிழக மக்களுக்குத் தெரியப்படுத்தி ...