இலங்கையில் நிலவும் தற்போதைய பொருளாதாரப் பின்னணி மற்றும் டீசல் விலை அதிகரிப்பு அபாயம் காரணமாக, தனியார் பேருந்து சேவைகளை 50% இனால் குறைக்கத் தீர்மானித்துள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். நுகேகொடையில் இன்று (07) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு ...
மகளிர் இருபதுக்கு-20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கு இணையாக பாகிஸ்தான் அணியுடன் நடைபெற்ற பயிற்சிப் போட்டியில் 9 விக்கெட்டுகளால் இலங்கை மகளிர் அணி வெற்றிப் பெற்றுள்ளது. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 168 ஓட்டங்களைப் பெற்றது. அணிசார்பாக ...
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே நடைபெறவிருந்த இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி முற்றிலுமாக கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜமைக்காவின் சபினா பார்க் கிரிக்கெட் மைதானத்தில் பெய்த பலத்த மழை காரணமாகவே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இப்போட்டியில் நாணய சுழற்சி மட்டுமே நடத்த முடிந்ததோடு, அதில் வெற்றி பெற்ற மேற்கிந்திய ...
நுரைச்சோலை, தழுவ முகத்துவாரப் பகுதியில் நீராடச் சென்ற மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இவ்விபத்தில் 18 மற்றும் 19 வயதுடைய இரண்டு இளம் பெண்களும், 24 வயதுடைய இளைஞர் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். நேற்று (06) மாலை 5:30 மணியளவில் இந்த அனர்த்தம் சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...
ஆனமடுவ, முதலக்குலிய பகுதியில் நேற்று (06) மதியம் 1:00 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 12 பேர் காயமடைந்துள்ளனர். பொலன்னறுவை பகுதியிலிருந்து சிலாபம், முன்னேஸ்வரம் கோவிலுக்கு சிறிய ரக லொறி ஒன்றில் வழிபாட்டிற்காக வந்த குழுவினர், மீண்டும் திரும்பிச் சென்று கொண்டிருந்த போது, ...
சுவிஸில் இருந்து யாழ்ப்பாணம் – சண்டிலிப்பாய் பகுதிக்கு வருகை தந்த முதியவர் ஒருவர் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அவரது வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டதுடன் நகை மற்றும் பணம் என்பன களவாடப்பட்டிருந்தன. குறித்த கொலையை மேற்கொண்ட சந்தேகநபர்கள் தலைமறைவாகி இருந்த நிலையில் நேற்று அதிகாலை (06) யாழ்ப்பாண ...
டெங்கு நோய் அதிவேகமாகப் பரவி வருவதன் காரணமாக, வைத்தியசாலைகளில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அவற்றின் கொள்ளளவையும் மீறி அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறையினர் எச்சரித்துள்ளனர். இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை தற்போது 35,000 ஐக் கடந்துள்ளதுடன், பதிவாகியுள்ள டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 19 ஆகும். ...
யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற விபத்தில் சிக்கி படுகாயமடைந்திருந்த இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மட்டுவில் பகுதியிலிருந்து புத்தூர் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த டிப்பர் வாகனத்துடன், வீதியின் குறுக்கே திடீரென நுழைந்த முச்சக்கர வண்டி மோதி இந்த விபத்து இடம்பெற்றிருந்தது. இதன்போது முச்சக்கர வண்டியின் மீது ...
டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைவது ஒரு பொருளாதார நெருக்கடி அல்ல என்று நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர், மத்திய கிழக்கில் நிலவும் யுத்த சூழ்நிலை காரணமாகவே இலங்கை பொருளாதாரத்தில் மோசமான தாக்கம் ஏற்பட்டுள்ளதாக ...
செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து நேற்றுமுன்தினம் (5), மூன்று சிறுவர்களுடைய எலும்புக்கூட்டுத் தொகுதிகள் உட்பட மேலும் 11 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியின் 17ஆம் நாள் அகழ்வுப் பணிகள் நேற்றுமுன்தினம் நடைபெற்றன. அதன்போது 13 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டிருந்த ...