எதிர்காலத்தில் பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட்டு, மக்கள் நலன்சார்ந்த புதிய சட்டமூலம் ஒன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று (19) நடைபெற்ற சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் ...
நம் நாட்டில் யுத்தம் நடந்து கொண்டிருந்த போது அதன் காரணம் குறித்தும் விளைவுகள் குறித்தும் ஆய்வு செய்த சர்வதேச தொண்டு நிறுவனம் ஒன்று தனது அறிக்கையில், இலங்கையில் பத்திரிகைப் பயங்கரவாதமே உள்ளது எனக் குறிப்பிட்டிருந்தது. அதாவது இலங்கையில் சிங்கள தமிழ் இனங்களுக்கிடையே மோதல்கள் ஏற்படுவதற்கும் சமாதானம் ஏற்படுவதைத் தடுப்பதிலும் ...
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்ச உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக, இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் இன்றைய தினம் (19) கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த குற்றப்பத்திரிகையில், ஏனைய பிரதிவாதிகளாக சேபாலிகா ...
நெடுந்தீவில் இருந்து கடற்றொழிலுக்காக சென்று காணாமல் போயிருந்த இலங்கை மீனவர் ஒருவரது சடலம் இந்தியாவில் கரையொதுங்கியுள்ளது. குறித்த சடலம் இன்று (19) நாகப்பட்டினம் கடற்கரையோரத்தில் கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த மீனவர் கடந்த 11ஆம் திகதி நெடுந்தீவு பகுதியில் இருந்து கடற்றொழிலுக்காக சென்ற நிலையில் ...
இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனமும் 25 திருகோணமலை கன்னியா வெந்நீருற்றுப் பிள்ளையார் ஆலயம் தொடர்பில் எழுந்த சர்ச்சை நீதிமன்றுக்குச் சென்ற போது, பிள்ளையார் ஆலயத்தை அமைப்பதற்கான இடத்தை கன்னியா வெந்நீருற்று வளாகத்தில் ஒதுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. பிள்ளையார் ஆலய தர்மகர்த்தா சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் வாதிட்டார் என்பதும் ...
லங்கா உப்பு நிறுவனத்தின் தற்போதைய பொது முகாமையாளர் ரத்நாயக்க முதியன்சலாகே குணரத்ன இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். முறையான கொள்முதல் செயன்முறையின்றி,விடுக்கப்பட்ட மீள் கொள்வனவு ஒன்றின் மூலம் ஹம்பாந்தோட்டை உப்பு நிறுவனத்திற்கு பொதியிடல் உறைகளைப் பெற்றுக்கொண்டதன் ஊடாக, அரசாங்கத்திற்கு சுமார் ஒரு கோடியே நாற்பத்து ...
யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்த முற்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 8 பேரையும் எதிர்வரும் திங்கட்கிழமை வரையில் சுங்க திணைக்கள அதிகாரிகளின் கட்டுப்பாட்டின் கீழ் தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. காங்கேசன்துறையில் இருந்து நாகப்பட்டினத்திற்கு நேற்று முன்தினம் பயணிக்கவிருந்த பயணிகளில் இரண்டு இந்திய ...
அமெரிக்காவுக்கும் – ஈரானுக்கும் இடையே சுவிட்சர்லாந்தில் இன்று (19) இடம்பெறவிருந்த பேச்சுவார்த்தை இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் வெளியுறவு அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது. குறித்த பேச்சுவார்த்தை பர்கன்ஸ்டாக் மலை உச்சியில் உள்ள விருந்தகம் ஒன்றில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மத்திய கிழக்கில் போரை முடிவுக்குக் ...
2026ஆம் ஆண்டின் கடந்த ஐந்தரை மாத காலப்பகுதியில் மாத்திரம் இடம்பெற்ற வீதி விபத்துக்களினால் 1,297 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் 1 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 16 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் பதிவான விபத்துத் ...
யாழ்ப்பாணம் நெளுக்குளம் பகுதியில் புகையிரத்தத்துடன் மோதி, இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். பலாலி இராணுவ முகாமில் கடமையாற்றும் பகலகம பகுதியை சேர்ந்த 26 வயதுடைய நிரோஷன் லக்மால் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த இராணுவ சிப்பாய் விடுமுறையில் வீட்டுக்கு சென்ற நிலையில், விடுமுறை காலம் முடிவடைந்த பின்னர் நீண்ட ...