ஆலடி மாநாடு
Share
வாத்தியார் வைத்திலிங்கம் தலைமையில் ஆலடி மாநாடு கூடியது. மாநாட்டு உறுப்பினர்கள் அனைவரும் ஆலடிக்கு வந்திருந்தனர்.
இறைவணக்கத்துடன் ஆலடி மாநாட்டை ஆரம் பிப்பம் என்று வாத்தியார் கூற, அனைவரும் எழுந்து நின்று இறை வணக்கம் செலுத்தி அமர்ந்தனர்.
தொடர்ந்து பண்டிதர் பரமலிங்கம் அவர்கள் எழுந்தார். சித்தங்கேணி ஞானபண்டிதக் குருக்கள் சபாரட்ண சர்மா அவர்களின் மறைவுக்கு இரண்டு நிமிட மெளன அஞ்சலி செலுத்துவோம் எனக்கூற, அனைவரும் எழுந்து இரண்டு நிமிட மெளன அஞ்சலி செலு த்தி அமர்ந்தனர்.
ஆலடியில் சில நிமிடம் மெளனம் நிலவி யது.மெளனத்தைக் கலைக்க விதானையார் விசுவலிங்கம் குரல் கொடுத்தார்.
விதானையார்: இப்ப எங்கட மண்ணில தற்கொலையும் விபத்துக்களும் தானே மரணத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்குது. இதைத் தடுப்பாரும் இல்லை. தட்டிக் கேட்பாரும் இல்லை எண்டதாக நிலைமை வந்திட்டுது.
கங்காணி: விதானையார் சொல்லுறது நூறு வீதம் உண்மைதான். அண்மையில கிளிநொச்சியில இளம் காதலர்கள் தற்கொலை செய்திருக்கினம். அதிலும் ஒரே கயிற்றில இருவரும் தூங்கி இறந்ததுதான் மிகப்பெரிய கொடுமையும் துன்பமும்.
இவ்வாறு கங்காணி கூறியதும் மீண்டும் ஆலடியில் நிசப்தம் நிலவியது.
சிறாப்பர்: ஒன்றாகத் தற்கொலை செய்த காத லர்கள் இருவரும் அரச உத்தியோகம் பார்க்கிற வர்கள். அதிலும் 28, 27 வயது வந்தவர்கள். இப் படிப் போய்த் தற்கொலை செய்யிறது எண்டால்…
மூப்பர்: என்ன இருந் தாலும் தற்கொலை மர ணங்களுக்கு ஒரு முடிவு கட்டவேணும். இது தொடர்பில சில பொது அமைப்புக்கள் கவனம் செலுத்தவேணும் எண்டு ஆலடியில ஒரு தீர்மான த்தை நிறைவேற்றுவம்.
இவ்வாறு மூப்பர் கூற, குறித்த தீர்மானம் ஆலடி யில் ஏகமனதாக நிறை வேற்றப்பட்டது.
விதானையார்: அதுசரி, ஒரு இலட்சம் வேலை வாய்ப்புத் திட்டம் வடக் குக் கிழக்கிற்கு வந்து சேருமோ?
சாத்திரியார்: எங்கட பிள்ளைகளின்ர கிரக பலன் எப்படி எண்டு தெரியாது. ஆனால் ஒரு இலட்சம் வேலைவாய்ப் பில வடக்கும் கிழக்கும் உள்வாங்கப்படுமெண்டு தான் சொல்லுகினம்.
பண்டிதர்: அதுசரி, நியமனம் கிடைத்த எங்கட பட்டதாரிப் பிள்ளைகள் பயிற்சி என்ற பெயரில வெயிலுக்க திரியிறதைப் பார்க்கப் பாவங்கள் போல இருக்குது.
வாத்தியார்: பண்டிதர் சொல்லத்தான் எனக்கு ஞாபகம் வருகுது. பட்டதாரிப் பயிலுநர்களுக்கான பயிற்சிகளில ஒரு பயிற்சி கிளிநொச்சியில நடக்கப் போகுதாம்.
ஆனால் நியமனம் கிடைத்த பட்டதாரிப் பயிலுநர் களில திருமணமான சில பெண்கள் கர்ப்பவதிக ளாக இருக்கினம். இருந் தும் அவர்களையும் யாழ் ப்பாணத்தில இருந்து பஸ் ஏறி கிளிநொச்சிக் குப் போக வேணும் எண்டு கட் டாயப்படுத்துறதாகக் கேள் விப்பட்டன்.
கங்காணி: இதென்ன கரைச்சலாக் கிடக்குது.
தாய்மை அடைந்திருக்கிற பெண்களை நீண்டதூரம் பயணிக்கச் சொல்லுறது எவ்வளவு பிழை.
இதுவிடயத்தில எங்கட யாழ்ப்பாண அரசாங்க அதிபர் தலையிட்டு மாற்று ஏற்பாடு ஒன்றைச் செய்யவேணும்.
இவ்வாறு வாத்தியார் கூறியதும் இப்படியான விடயங்களை அரச அதி காரிகள் மனிதநேயத் தோட கையாளவேணும். இதை விட்டிட்டு கட்டாயப் பயிற்சி என்பற்காக, நெகிழ்வுத்தன்மை இல்லாமல் நடக்கக்கூடாது.
தாய்மை அடைந்துள்ள பெண்களை பஸ்ஸில போங்க, தூர இடத்துக்குப் போங்க எண்டெல்லாம் சொல்லாமல் அவர்க ளுக்கு ஏற்றாற்போன்ற பயிற்சி இடங்களை ஒழு ங்கு செய்யவேணும்.
மூப்பர்: அதுசரி, மன் னார் திருக்கேதீச்சர நுழைவாயில் வளைவு விவகாரம் என்ன மாதிரியாக இருக்குதாம்.
சிறாப்பர்: அ முடி ந்த விடயம். நிர்வாகத்தில இருக்கிற ஒரு சிலர், கத் தோலிக்க மதத்தவர் சிலரைத் தூண்டிவிட்டு வளைவை தள்ளி விழுத் தினதாகவல்லோ கதை அடிபடுகுது.
(சிறாப்பர் இவ்வாறு கூறியதும் வாத்தியார் வைத்திலிங்கத்திற்குக் கடும் கோபம் வந்தது)
இஞ்சே சிறாப்பர் இந்தக் கதையள் ஒண் டும் இஞ்ச தேவையி ல்லை. இனி நாங்கள் திருக்கேதீச்சர ஆலய த்தை மறந்திட்டம். முடி ஞ்சால் திருக்கேதீஸ்வரப் பெருமான் பார்த்துக் கொள்ளட்டும்.
வாத்தியார் அதட்ட லாகப் பேசியதும் ஆலடி மாநாடு அதிர்ந்து போனது. வாத்தியாரின் கோபத் திலும் நியாயம் இருக்க த்தான் செய்யிது.
திருக்கேதீச்சர ஆலய நிர்வாகம் கடந்த பொதுத் தேர்தலில ஒரு அரசியல் கட்சியை ஆதரித்து பேட்டி கொடுத்திருந்தது.
ஒரு பெரும் வரலாற் றுச் சிறப்புமிக்க சிவனா லய நிர்வாகம் இந்தளவு தூரம் கீழிறங்கினது என்பதற்கு என்ன காரணம் எண்டு ஒருத்தருக்கும் தெரியாமல் இருக்காது.
எங்கும் ஊழலும் இலஞ்சமும் தலைவிரித்தா டத் தொடங்கி விட்டுது. இனி மன்னார் திருக்கே தீச்சரத்தைப் பற்றி ஆலடியில் கதைக்கிறதில்லை எண்டொரு தீர்மான த்தை எடுத்தாக வேணும்.
பண்டிதர் பரமலிங்கம் கண்ணைத் துடைத்தபடி கூறினார்.
வாத்தியாரின் ஆதங்கத்தைப் புரிந்து கொண்ட மாநாட்டு உறுப்பினர்கள்; பண்டிதர் கொண்டு வந்த தீர்மானத்தை ஏற்றுக் கொள்ள, அதற்கு ஆலடிப் பிள்ளையாரும் அனு மதி வழங்குவதுபோல கண்டாமணியும் ஒலிக்க, ஆலடியில் இருந்தவர்கள் எழுந்து கோயிலுக்குச் சென்றனர்.