Type to search

Headlines

பனையின் உன்னதமான சத்துணவுகளை நாம் உதாசீனப்படுத்துவது ஏன்?

Share

எமது கலாசாரத்தின் அடை யாளமாக வரட்சியைத் தாங்கும் தூணாக கற்பக தருவாக சித்திரிக் கப்படும் பனை மரங்கள் பாவம். எமது மத்தியில் தோன்றியதால் பல கஷ்டங்களையும் அவமதிப்புக் களையும் தாங்கி நிற்க வேண்டிய நிலை காணப்படுகிறது.

இதே பனை மரங்கள் அபிவிரு த்தி அடைந்த வல்லரசு நாடுகளிலே செழித்து வளரக் கூடியனவாக இருந்திருந்தால் பனம் பழங்கள் ஒவ்வொன்றும் ஈய உறைகளிலே சுற்றப்பட்டு அதன் மேல் ஸ்ரிக்கர் ஒட்டப்பட்டு பாரிய விளம்பரங்களு டன் இங்கு இறக்குமதியாகி வந்தி ருக்கும்.

இலகுவில் ஏமாறக் கூடிய மனம் படைத்த நாமும் பணத்தை வாரி இறைத்து அவற்றை வாங்கி உண்டிருப்போம். இதே பனை மர ங்கள் அமெரிக்கா தேசத்திலே வளருபவையாக இருந்திருந்தால் பனங் கிழங்குகளின் மருத்துவக் குணங்களை உலகறிந்திருக்கும்.

கருப்பட்டிகள் அருமருந்தாகச் சித்திரிக்கப்பட்டிருக்கும். நுங்கு களின் மகத்துவம் பேசப்பட்டிருக் கும். ஒடியல், புழுக்கொடியல், மா வகைகள் உலக சந்தையிலே பெரும் இடத்தைப் பிடித்திருக்கும். பனையின் ஒவ்வொரு பகுதிக ளும் உலகின் உபயோகத்திற்கு வந்தி ருக்கும்.

ஆனால் பாவம் இந்தப் பனை மரங்கள் பாவப்பட்ட எம் மக்கள் மத்தியிலே தோன்றி பொலிவிழந்து காணப்படுகிறது.

பானங்களிலே அதிகூடிய புரதச் செறிவுடைய பானம் நுங்கு என்பது நம்மில் பலருக்கு தெரியாது. பால் தான் புரதச் செறிவுடைய பானம் என்று நினைத்துக் கொள்கிறோம். 100g பாலிலே 3.3gபுரதம் இருக் கிறது. ஆனால் 100g நுங்கிலே 10.8g புரதம் இருக்கிறது. பாலி னைப்போல் 3 மடங்கு புரதச் செறி வுள்ள பானம் நுங்கு என்பதை மனதில் நிறுத்துவோம்.

நுங்கினுடைய உலர் நிறையிலே 60% புரதமும் 30 % மாப்பொருளும் இருப்பதுடன் மிகக் குறைந்தளவு கொழுப்பே இதனில் காணப்படு கிறது. பனங்கூடல்களுக்குள் வசி க்கும் எமது சிறார்கள் புரதக்குறை பாட்டினால் அவதியுறுகின்றனர். ஆனால் அவர்களுக்கு இந்த நுங் கின் மகத்துவம் சொல்லிக் கொடுக்க ப்படுவதில்லை.

எம்மத்தியிலே ஒரு கோடிக்கும் அதிகமான பனைகள் இருந்தும் அவற்றில் இருந்து கிடைக்கும் பனம் பழங்களில் 5 வீதமான பனம் பழங் கள் கூட உபயோகப்படுத்தப்படுவ தில்லை. வண்டுகளிடமிருந்தும் புழுக்களிடமிருந்தும் அவற்றை முற் றாகக் காப்பாற்றி அனைத்துப் பழங் களையும் முழுமையாகப் பயன் படுத்துவது எப்படி என்பது சம்பந்த மான வழிமுறைகளை நாம் ஆராய வில்லை.

புரதச்சத்து நிறைந்த விற்றமின் கள், கனியுப்புக்கள் நிறைந்த எமது அரும் சொத்தான பனம் பழங்கள் வீணடிக்கப்பட்டு மண்ணுக்கு உர மாகிக் கொண்டிருக்கின்றன.

பனம் பழங்களின் உலர் நிறையில் 11 வீதம் புரதமும் பெரு மளவு பீட்டா (-) கரோட்டினும் ஏனைய விற்றமின்களும் இரும்பு, கல்சியம் போன்ற கனியுப்புக்களும் அதிகமாகக் காணப்படுகின்றன. இந்தப்பனம் பழங்களை மக்கள் விரும்பி உண்ணக்கூடிய வகையில் எவ்வாறு மாற்றங்கள் செய்வது என்பது சம்பந்தமான பல ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட வேண்டும். சோடா வுக்கு மாற்றீடாக பனம் பழங்களிலி ருந்து பல வகையான சுவையான பானங்கள் உற்பத்தி செய்யப்பட வேண்டும். இடியப்பத்தினுள்ளும் பிட்டினுள்ளும் பனங்களி சேர்த்து சமைப்பதன் மூலம் அவற்றின் சுவை யும் நிறமும் ஊட்டச்சத்தும் மெருகு பெறும் என்பது சொல்லிக்கொடுக் கப்பட வேண்டும். பனங்களிகளை இலகுவில் பிரித்தெடுப்பது பாதுகாக் கும் பொறிமுறைகள் கண்டறியப்பட வேண்டும்.

பனம் பழங்களின் மருத்துவக் குணங்களும் அதிலே காணப்படும் நோய் எதிர்ப்புத் தன்மையும் விஞ் ஞானபூர்வ ஆராய்ச்சிகள் மூலம் உறுதி செய்யப்படவேண்டும்.இந்த முயற்சி வெற்றி அளிப்பின் நாம் பனம் பழங்களை ஈய உறைகளில் சுற்றி அவற்றில் ஸ்ரிக்கரும் ஒட்டி வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக் கூடிய நிலையும் ஏற்படலாம்.

பலவிதமான விளம்பர யுத்தி களுடன் இறக்குமதியாகி அதிக விலையில் விற்பனையாகும் ஓட்ஸ் வகைகள் எமது அன்றாட உணவு களில் ஒன்றாக மாறும் நிலை காணப்படுகிறது.ஆனால் எமது சொந்த மண்ணில் விளையும் ஓட்ஸிலும் சிறந்த அதிக நார்த்தன்மை கொண்ட மலிவான இயற்கையான பனங்கிழங்குகளை நாம் புறக்கணி த்து விடுகின்றோம். பனங்கிழங்கு கள் அதிகளவு நார்த்தன்மையும் மிகக்குறைந்தளவு கொழுப்பும் கொண்டிருப்பதுடன் உலர் நிறை யில் 12 வீத புரதத்தையும் பலவிற்ற மின்கள், கனியுப்புக்களையும் கொண்டிருக்கின்றன.

பனங்கிழங்குகளில் இருக்கும் மாப்பொருளானது குறைந்த வேக த்திலே உடலினுள் அகத்துறிஞ்ச ப்படுவதால் இது நீரிழிவு நிலை உள்ளவர்களுக்கும் ஒரு சிறந்த உணவாக காணப்படுகின்றது. பனம் பழங்களின் பயன்கள் அனை த்தையும் எடுத்த பின்பு அதன் விதைகளை பனம்பாத்தி போடு வதன் மூலம் பனங்கிழங்குகளை பெற்றுக்கொள்ள முடியும். இதன் மூலம் பனம்பழங்களும் பனம் விதைகளும் பயனுடையவையாக மாற்றம் பெறும். அத்துடன் பனங் கிழங்குகளை பதப்படுத்தி பனங்கிழ ங்குகளாகவே பாதுகாக்கும் பொறி முறை கண்டறியப்பட வேண்டும்.

Dr..சி.சிவன்சுதன்
பொது வைத்திய நிபுணர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link