கொவிட் – 19 பாதிப்பு பரிகாரம் தேடுங்கள்
Share
யாழ்ப்பாணத்தில் உணவுச்சாலை நடத்துகின்ற அன்பர் ஒருவரைச் சந்தித்தேன்.
அவரின் முகத்தில் வாட்டம் தெரிந்தது. களைப்பும் கவலையும் புரையோடியிருந்தன.
காரணத்தை அறிவதற்காக என்ன நடந் தது என்று கேட்டேன்; பிஸ்னஸ் படான். என்ன செய்வதென்று தெரியவில்லை என்ற அவர், இடைவிடாது தொடர்ந்தார்.
முன்பெல்லாம் ஒரு இலட்சம் ரூபாய் வரை வியாபாரம் நடைபெற்றது. இப்போது பத்தாயிரம் ரூபாவுக்கு வியாபாரம் நடப்பது கூட கடினமாக இருக்கிறது.
கொரோனாத் தொற்றுக் காரணமாக உண வுச்சாலைகளில் இருந்து ஆகாரம் உண்ணக் கூடாது என்ற கட்டுப்பாடு நடைமுறைக்கு வந்த தும் எல்லாம் அம்போ என்றாயிற்று என்றார் அவர்.
இது உணவுச் சாலை நடத்துகின்றவர்களின் கஷ்ட நிலை என்றால்,
புடவை வர்த்தகம், நகை வியாபாரம், பழ வகை விற்பனையாளர்கள் என பலதரப்பின ரும் தொழில் முடக்கம் காரணமாகப் பெரும் துயருற்றுள்ளனர்.
வங்கியில் எடுத்த கடனைத் திரும்பிச் செலுத்த முடியவில்லை என்ற ஏக்கம் ஒரு புறம்.
விடிந்தால் போதும் லீசிங் கம்பனிகளின் தொல்லை. இப்படியாக சகல பக்கத்தாலும் நெருக்கடிகள் மக்களைச் சூழ்ந்திருப்பது மிகப்பெரும் வேதனைக்குரியது.
கொரோனாத் தொற்றுக் காரணமாக ஏற் பட்டுள்ள இந்த இடர் தொடர்பில் பிரதேச மட்டத்திலேனும் பரிகாரம் தேட முடியுமா? என்று சம்பந்தப்பட்ட அரச தரப்புகள் சிந்திப்பது நல்லது.
குறிப்பாக உணவகங்களில் இருந்து சாப்பிட முடியாது. தனித்து பார்சல் வியாபாரம் மட்டுமே செய்ய முடியும் என்ற சுகாதாரத் திணைக் களத்தின் கட்டுப்பாட்டில் ஏதேனும் பரிகாரங் கள் தேடி உணவுச்சாலை உரிமையாளர்கள் நட்டமடைவதைத் தடுக்க முடியுமா? என்று ஆராய்வது அவசியமாகிறது.
தவிர, மாதாந்தம் கடன் செலுத்துகின்ற நடைமுறைகளில் ஏதேனும் விதிவிலக்குகள் செய்ய முடியுமா? என்பது பற்றி நம் மத்தியில் இயங்குகின்ற நிதி நிறுவனங்கள் ஆராய்ந்து அதற்குப் பரிகாரம் தேடினால் அதைவிட்ட புண்ணியம் வேறு ஏது?
ஆக, கொரோனாத் தொற்று பலரையும் பல வழிகளில் பாதித்துள்ளன. நோய்த் தொற்றி னால் ஏற்படுகின்ற பாதிப்பு என்பதற்கப்பால் தொழில் இழப்பு, தொழில் பாதிப்பு, தொழில் முடக்கம் என்றவாறு கொரோனாப் பாதிப்பு சந்துபொந்தெல்லாம் ஊடுருவி இருப்பதனால், இதுபற்றி நம் அரச நிர்வாகங்களும் அரசி யல் தரப்புகளும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதிலும் குறிப்பாக வடபுலம் யுத்தத்தின் பாதிப்புக்களில் இருந்து இன்னமும் மீளமுடிய வில்லை.
யுத்தப் பாதிப்புக் காரணமாக குடும்பத் தலை வர்களை இழந்த பெண் தலைமைத்துவ குடும்பங்கள் நுண்கடன் திட்டத்துக்குள் சிக் குண்டு தவிக்கின்றன.
வீட்டில் இருந்து உணவுப்பண்டங்கள், சிற் றுண்டிகள் செய்து அவற்றை உணவுச் சாலை களுக்கு வழங்கித் தத்தம் சீவனோபாயத்தை நடத்திய குடும்பங்கள் இன்று செய்வதறி யாது நிற்கின்றன.
இவ்வாறு கொவிட் – 19 காரணமாக பல வழிகளாலும் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் அவல நிலையை அரசாங்கத்தின் கவனத் துக்குக் கொண்டு செல்வது சம்பந்தப்பட்டவர் களின் தார்மீகக் கடமையாகும்.