Type to search

Headlines

முல்லையில் 180 ஏக்கர் காடழிப்பு அம்பலமாகியது

Share

முல்லைத்தீவில் ஊடகவியலாளர்கள் இருவர் தாக்கப்பட்ட தன் எதிரொலியாக முல்லை நாகஞ்சோலை பகுதியில் 180 ஏக்கர் காடு அழிப்பு அம்பலமாகியுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட ஊடக வியலாளர்களான சண்முகம் தவசீலன், கணபதிப்பிள்ளை குமணன் ஆகிய இருவர் மீது மரக்கடத்தல்காரர்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் பின்னணியில் நீதி மன்றின் உத்தரவின் பேரில் முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊடகவியலாளர்களால் தேக்கு மரங்கள் சட்டவிரோதமாக வெட்டப்படுவதாக சுட்டிக் காட்டப்பட்ட வனப் பகுதி கள் உள்ளடங்கலான நாகஞ்சோலை வன பகுதியில் 180 ஏக்கர் அரச காடுகள் அழிக் கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் நீதிமன்றில் நேற்று தெரிவித்துள்ளார்கள்.

சட்டவிரோத காடழிப்பு தொடர்பில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர் கள் தாக்கப்பட்டமை தொடர்பிலான வழக்கு விசாரணை நேற்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் விசா ரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

யார் காடழிப்பு செய்தது என்பது தொடர் பில் இதுவரையில் உறுதிப்படுத்த முடியாது இருப்பதாக பொலிஸாரும் வனவளத் திணைக்களத்தினரும் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் காடழிப்பு தொடர்பில் சில வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அழிக்கப்பட்ட மரங்கள் ஒரு தொகுதியும் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஆனால் சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என மன்றில் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link