பணப் பரிமாற்றங்களின் போது கொரோனா பரவ வாய்ப்பு அதிகம்
Share
நாட்டில் 18 பொலிஸ் பிரிவுகளுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதும் நாட்டில் அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று அவதான நிலைமை காணப்படுவதாகவும் பணப் பரிவர்த்தனையின் போது கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவும் அபாயம் காணப்படுவதாகவும் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இதன் காரணமாக பணபரிவர்த்தனையின் போது மிகவும் கவனமாக செயற்படுமாறு பிரதிப் பொலிஸ் மா அதிபர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதேவேளை, கொரோனா தொற்று தனக்கு ஏற்பட்டுள்ளது என சந்தேகம் இருந்தால் அது தொடர்பில் அச்சம் கொள்ளாமல் உடனடியாக சுகாதார பிரிவினருக்கு அறிவிக்குமாறு கொரோனா வைரஸ் தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் விசேட வைத்திய நிபுணர் தெரிவித்துள்ளார்.