நீதி பரிபாலனத்தின் மூலமே சிறு பான்மை மக்களின் உரிமையை நிலைநாட்ட முடியும்
Share
இலங்கை பெளத்த சிங்கள நாடு என உரிமை கொண்டாடப்படுகிறதெனில் அங்கு சிறுபான்மை இன மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுமென நம்புவது மடமைத்தனமாகும்.
பல்லின மக்கள் வாழ்கின்ற ஒரு நாட்டை தமக்குரியதென உரிமை கொண்டாடுகின்ற சிறுமைத்தனம் ஆட்சியாளர்களிடம் இருக் கும்போது அங்கு அடிமைத்தனம் இருக்கும் என்பது நிராகரிக்க முடியாத உண்மை.
இங்கு அடிமைத்தனம் என்பது சிறு பான்மை இன மக்கள் வஞ்சிக்கப்படுவது முதல் அவர்களை நசுக்கி அந்த மக்களை மீள் எழமுடியாத வகையில் இரும்புக் கரம் கொண்டு நசுக்குவதைக் குறிப்பதாகும்.
இந்த வகையில்தான் இலங்கையில் சிறு பான்மை இன மக்களை பேரினவாதத் தீ காலத்துக்குக் காலம் சுட்டெரிக்கிறது.
ஆட்சி அவர்களுடையது. எனவே சிறு பான்மை இனத்தின் மீது ஆட்சியாளர்கள் எது செய்தாலும் அதனைக் கண்டு கொள் ளக்கூடாது என்ற நிலைப்பாட்டில் சர்வதேச சமூகம் இருப்பதனால், நிலைமை மோசமாகி வருகிறது.
ஆம், 1983இல் நடந்த ஜூலைக் கலவரத் தின்போது தமிழ் மக்கள் கொன்றொழிக் கப்படுவது கண்டு அன்னை இந்திரா காந்தி சீற்றம் கொண்டார்.
அதன் பின்னணியாக இந்திய விமானங் கள் இலங்கைக்குள் நுழைந்து உணவுப் பொட்டலங்களைப் போட்டதும் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை அன்றைய பிரதமர் ராஜிவ் காந்தி செய்ததும் இந்திய அமைதிப் படையை இலங்கைக்கு அனுப்பி வைத்ததும் நடந்தேறின.
ஆனால் 2009ஆம் ஆண்டு நடந்த கொடும் யுத்தத்தில் அப்பாவித் தமிழ் மக்கள் கொன் றொழிக்கப்பட்டபோது – எங்கள் உயிரைக் காப்பாற்றுங்கள் எனக் கெஞ்சிக் கேட்டபோது சர்வதேச சமூகம் பாராமுகமாக இருந்தது.
தவிர, சர்வதேச தொண்டு நிறுவனங்கள் தங்கள் பணிகளை மறந்து ஓடித்தப்பின.
ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் கடன் கழிப்பதுபோல உலங்குவானூர்தியில் இருந்து வன்னி மண்ணைப் பார்த்துப் போனார். அதனோடு எல்லாம் முடிந்து போயிற்று.
ஆக, சர்வதேசம் தமிழ் மக்களுக்கு உத வும் என்ற நம்பிக்கை அனைத்தும் தவிடு பொடியாகின.
நிலைமை இதுவாக இருக்கையில், சிறு பான்மைத் தமிழ் மக்களுக்கு இப்போது இருக்கின்ற ஒரேயயாரு நம்பிக்கை நீதிபரி பாலனம் மட்டுமே.
எனவே இந்த நாட்டின் நீதிபரிபாலனம் வழங்கக்கூடிய தீர்ப்புகளே சிறுபான்மை இன மக்களுக்கு உரிமையையும் எதிர்கால நம் பிக்கையையும் தருவதாக இருக்கும்.