அரசாங்கம் நாட்டு மக்களிடம் அபிப்பிராயம் கோருவது அவசியம்
Share
அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் மக்களிடம் அபிப்பிராயம் கோரப்படாமல் நிறைவேற்றப்பட்டமையால், மக்களிடம் அபிப்பிராயம் கோராமலேயே அதில் திருத்தங்களைச் செய்யமுடியும் என்று முன்வைக்கப்படுகின்ற தர்க்கம் நியாயமானதாகும்.
ஆனால் இறையாண் மையைப் பலப்படுத்துவ தற்கு மக்களிடம் அனுமதி பெறத் தேவை யில்லை. மாறாக அதனை வலுவிழக்கச் செய்வதெனின் நிச்சயமாக மக்களிடம் அனுமதி கோர வேண்டும். 19ஆவது திருத்தம் மக்களின் இறையாண்மையை ஸ்திரமடையச் செய்தது.
ஆனால் அந்த வெற்றியை 20ஆவது திருத்தத்தின் ஊடாக மீண்டும் பின்நோக் கித் திருப்புவதாக இருந்தால் மக்கள் அபிப்பிராயம் கோரப்பட வேண்டியது இன்றியமை யாததாகும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயம்பதி விக்ரமரத்ன வலி யுறுத்தியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,
அரசியலமைப்பின் 20ஆவது திருத்த யோசனை முன்மொழியப்பட்டிருக்கின்றது.
அதுகுறித்து ஒரேயொரு வரியில் கூற வேண்டுமானால், அது 2010 – 2015 ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு நாட்டை மீண்டும் கொண்டு செல்லும் என்பதேயாகும்.
இந்த 20ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படுமானால் 19ஆவது திருத்தத்தில் எஞ்சுபவை ஜனாதிபதியினதும் பாராளுமன்றத்தினதும் பதவிக் காலம் 5 வருடங்கள், ஜனாதிபதி பதவிக்கான வரையறை மற்றும் தகவல் அறியும் உரிமைச்சட்டம் ஆகியவை மாத்திரமேயாகும்.
ஜனநாயக ஆட்சிமுறை ஒன்றின் மீதும் மக்களின் இறையாண்மை மீதும் 20ஆவது திருத்தம் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்களை விளக்குவதுடன் அதுகுறித்து மக்கள் மத்தியில் விரிவான தர்க்கம் ஏற்படுவது அவசியம் என்பதை வலியுறுத்துவதே எனது நோக்கமாகும்.
அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத் தின் ஊடாக இலங்கையின் ஜனாதிபதி முறை உலகிலேயே மிகவும் பலம் வாய்ந் ததும் மிகமோசமானதுமான ஒன்றாக மாறியது.
இந்நிலையில் 19ஆவது திருத்தத்தின் ஊடாகப் பெற்றுக்கொண்ட அடைவுகள், வெற்றிகள் அனைத்தையும் இல்லாமல் செய்து மீண்டும் பின்நோக்கிச் செல்வ தையே 20ஆவது திருத்த முன்மொழிவு இலக்காகக் கொண்டிருக்கின்றது.
அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத் தில் பல்வேறு குறைபாடுகள் காணப்படு கின்றன. அவற்றில் ஒன்று நிறைவேற் றதிகாரமுடைய ஜனாதிபதி முறையை முற்றாக ஒழிக்காமல் இருப்பதற்கு நல் லாட்சி அரசாங்கம் தீர்மானித்தமையாகும்.
அதேபோன்று பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக் கொள்வதற்கான எதிர்க்கட்சி யினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டமையும் குறைபாடுகள் ஏற்படுவதற்குக் காரணமாக அமைந்தன.
அரசாங்கத்தினால் முன்மொழியப்பட் டிருக்கும் 20ஆவது திருத்தத்தின் ஊடாக பாராளுமன்றம் முழுமையாக ஜனாதிபதியின் கீழ் கொண்டு வரப்பட்டிருக்கிறது.
அதேபோன்று ரணசிங்க பிரேமதாஸ பிரதமராக இருந்த காலத்தில் 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பின் விளைவாக அவர் ஒரு பியூனாக (அலுவலக காரிய தரிசி) மாற்றப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.
எனினும் 19ஆவது திருத்தத்தின் மூலம் பாராளுமன்றத்தின் நம்பிக்கையைப் பெற்ற பிரதமருக்கு அதிகளவான அதி காரங்கள் கிடைத்தது.
ஆனால் 20ஆவது திருத்தம் நிறை வேற்றப்பட்டால் பிரதமர் மீண்டும் பியூனாகவே மாறவேண்டியிருக்கும். பிரதமரை எப்போது வேண்டுமானாலும் நீக்க முடியும். அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களை ஜனாதிபதி நியமிக்கும் போதும் நீக்கும் போதும் பிரதமரிடம் அபிப்பிராயம் கோரவேண்டிய அவசிய மில்லை என அவர் தெரிவித்தார்.