Type to search

Editorial

பேரினவாதத் தீக்கு விறகடுக்க காலந்தோறும் பிறப்பெடுக்கிறார்

Share

நல்லோரைக் காக்கவும் தீயோரை அழிக்கவும் யுகம் தோறும் அவதாரம் எடுப்பேன் என்றார் கீதோபதேசம் செய்த கிருஸ்ண பரமாத்மா.

அதர்மத்தை அழித்து தர்மத்தைக் காப்பதற்காகக் கண்ண பரமாத்மா எடுக்கின்ற அவதாரம் பத்து என்றாயிற்று.

எனினும் அதர்மம் வலிமை பெற்றிருக் கிறதேயன்றி தர்மம் மேலோங்கியதாகத் தெரியவில்லை.

அதிலும் குறிப்பாக, இலங்கையைப் பொறுத்த வரை சிங்களப் பேரினவாதத் தீயை அணைய விடாது எண்ணெய் ஊற்றவும் விறகு அடுக்க வுமென காலந்தோறும் சிங்களப் பேரினவாதி கள் பிறந்து கொண்டே இருப்பதுதான் இங்கு கவனிக்கப்பட வேண்டிய விடயம்.

ஆம், எந்தக் காலத்திலும் தமிழ் மக்களுக்கு எதிராகக் கோசம் போடுகின்றவர்கள் பாராளுமன்றத்துக்கு வந்து கொண்டே இருக்கின்றனர்.

தமிழ் அரசியல் தலைவர்களுக்கு எதிராகப் பேசுவதும் தமிழ் மக்களைச் சீண்டுவதுமே இவர்களின் பணியாக இருக்கிறது.

ஒவ்வொரு பாராளுமன்ற ஆட்சியிலும் யாரோ ஒருவர், தமிழ் மக்களைக் கண்ட பாட்டில் தூற்றுவதைத் தவறாமல் செய்கின்றார்.

இதனைப் பார்க்கும்போது இந்தப் பொறுப்பை ஆட்சியாளர்கள் சம்பந்தப்பட்டவரிடம் ஒப் படைத்து விடுகின்றனரோ என்றுகூட எண்ணத் தோன்றும்.

அந்தளவுக்கு தமிழ் மக்களை மிகக் கேவ லமாகப் பேசுவதே இவர்களின் ஒரே இலக் காக இருக்கிறது.

அந்த வகையில் இலங்கையின் ஒன்பதா வது பாராளுமன்றத்தில் உறுப்பினராக வந் துள்ள அட்மிரல் சரத் வீரசேகர; தமிழ் மக் களைச் சீண்டுவதையும் தமிழ் மக்களுக்கு எதிராகப் பேசுவதையும் தனது தார்மீகப் பணியாகக் கொண்டுள்ளார்.

ஒரு பொறுப்பு வாய்ந்த பாராளுமன்ற உறுப் பினர் என்பதை மறந்து, தமிழினத்துக்கு எதி ராகக் கண்டபாட்டில் கதைத்து இனவாதத் தீயை மூட்டி விடுகின்ற இவரின் கொடுஞ் செயலை யாரேனும் கண்டிப்பதாகவும் இல்லை.

அண்மையில் பாராளுமன்றத்தில் உரை யாற்றிய சரத் வீரசேகர, தமிழ் மக்களுக்கு வரலாறு எதுவும் கிடையாது என்ற பொருள் பட உரையாற்றியிருந்தார்.

இலங்கைத் தீவின் ஆதிக் குடிகளான தமிழ் மக்களின் வரலாறுகளைக் திட்டமிட்டு அழிப்பதும் தமிழர் வரலாற்றைத் திரிவுபடுத்து வதும் வரலாற்றுப் பாடநூல்களில் தமிழர் களின் பூர்வீக வரலாற்றை வெளிப்படுத்தாமல் மகாவம்சத்தை வரலாறாகப் போதிப்பதையும் செய்து கொண்டு, தமிழர்களுக்கு வரலாறு இல்லை என சரத் வீரசேகர கூறுவது மிலேச் சத்தனமானது.

இத்தகைய இனக் குரோதம் ஒருபோதும் இந்த நாட்டுக்கு விமோசனத்தைத் தர மாட் டாது. மாறாக அழிவையே அது தந்து தீரும்.

ஆகையால் இனியேனும் இனவாதம் பேசு வதைத் தவிர்த்து இந்த நாடு அனைவருக்கு மானது என்ற நினைப்போடு பேசுவதே நன்மை தரும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link