Type to search

Editorial

எங்கள் அரசியல்வாதிகளை அவதானித்துக் கொண்டிருங்கள்

Share

தேர்தலில் வாக்களித்ததோடு தங்கள் கடமை முடிந்து விட்டதாகத் தமிழ் மக்கள் நினைக்கின்றனர்.

இதனாலேயே தமிழ் அரசியல்வாதிகளில் பலர் தமது பணிகளை மறந்து செயற்படு கின்றனர்.

இதுதவிர, சில தமிழ் அரசியல் கட்சிகளி டையே நிலவுகின்ற உள்ளக முரண்பாடு களைப் பார்ககும்போது இஃதென்ன அநியாயம். தேர்தல் முடிந்த கையோடு இப்படியயல் லாம் நடக்கிறது என்று நினைக்கத் தோன்றும்.

தேர்தல் பிரசாரங்களில் வெட்டி விழுத்து வது போலக் கூறிக் கொண்டவர்கள், இப் போது செய்வது என்ன என்பதைப் பாருங்கள்.

தமிழ் மக்களுக்கு விடிவைப் பெற்றுத் தருவோம் என்று கூறியவர்கள் இப்போது தங்கள் எதிர்கால அரசியலுக்காகக் களம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாராளுமன்றப் பதவிக் காலமான ஐந்து ஆண்டுகளில் நான்கு ஆண்டுகள் தங்களின் நலன் என்பதாக ஆக்கிக் கொண்டு, எஞ்சிய இறுதி ஒரு வருடத்தில் மட்டும் தமிழ் மக்கள், தமிழ் இனம், அபிவிருத்தி என்ற கோசங் களைப் போடத் திட்டமிடுவர்.

இந்தக் கோசங்கள் ஏலவே நான்கு ஆண்டுகளில் தாம் செய்த சொந்த நலன் சார்ந்த விடயங்களை மறைப்புச் செய்யும் என்பது சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகளுக்கு நன்கு தெரியும்.

இதற்கான அடிப்படைக் காரணம் அவர் களன்று. மாறாக தமிழ் மக்களாகிய நாம் என்பதே மெய்.

உண்மையில் ஒவ்வொரு தேர்தலுக்குப் பின்னரும் வெற்றியீட்டியவர்கள் மற்றும் அவர்கள் சார்ந்த கட்சிகள் எங்ஙனம் நடந்து கொள்கின்றன என்பதைப் பொதுமக்கள் அவதானிக்க வேண்டும்.

அதிலும் குறிப்பாக, தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் தேர்தல் பிரசாரத்தின் போது கூறியவை என்ன? அவர்கள் சார்ந்த கட்சி களின் தேர்தல் விஞ்ஞாபனம் என்ன? என் பதையயல்லாம் நாம் அவதானிப்பதுடன் ஞாபகத்திலும் வைத்திருக்க வேண்டும்.
இந்த அவதானிப்பில் அனைத்துத் தமிழ் மக்களும் தங்களை ஈடுபடுத்திக் கொள்வது அவசியமாகும்.

இதற்கு மேலாக, கட்சி ஆதரவு என்பதை முற்று முழுதாக விலக்கி நடுநிலை நின்று உண்மையாக – விசுவாசமாக தமிழ் மக் களுக்காகப் பாடுபடுகின்றவர்கள் யார்? குரல் கொடுப்பவர்கள் யார்? என்பதை மக்கள் அவ தானித்து இனங் காண வேண்டும்.
இந்த அவதானிப்பு நடக்குமாயின், தேர்த லில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் அவர் தம் அரசியல் கட்சிகள் தங்களை மக்கள் பணி யில் ஈடுபடுத்துவர்.

ஆக, அரசியல்வாதிகளை வழிப்படுத்த தேர்தலுக்குப் பின்பான மக்களின் அவ தானிப்பு மிக மிக அவசியமானதாகும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link