Type to search

Editorial

ஆபத்பாந்தவனான கிருஷ்ணன் சூதைத் தடுக்காதது ஏன்?

Share

இதிகாச காப்பியமான மகாபாரதத்தை அனைவரும் கற்றறிய வேண்டும். இராமா யணத்தைக் கடந்து, மகாபாரதம் போதிக்கின்ற தத்துவங்கள் மனித வாழ்வுக்குத் தேவையானவை.

இராமாயணத்தில் அவதார புருசனாகிய இராமர் துன்பப்படுகின்றார்.

மகாபாரதத்தில் அவதார மூர்த்தியான கிருஷ்ண பரமாத்மா தர்மத்தை நிலைநாட்டு வதற்காகச் செயலாற்றி நிற்கிறார்.

அவதாரமாயினும் பூமியின்கண் வந்துற்றால் கன்மவினைப்பயன் பற்றிக் கொள்ளும் என்ற உண்மை இராமாயணத்தில் உணர்த்தப்படுகிறது.

மகாபாரதத்தில் அவரவர் செய்கின்ற பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப தண்டனை வழங் கப்பட்டு தீயோரை அழிப்பதும் நல்லோரைக் காப்பதுமான காரியம் நடந்தாகிறது.

இஃது இராமாயணம் – மகாபாரதம் என்ற இரு பெரும் இதிகாசங்கள் தொடர்பான ஒப் பிடுகை.

இவை ஒருபுறமிருக்க, கெளரவர் சபை யில் திரெளபதியின் துகில் களையப்பட்ட போது, கண்ணா! என்ற அவலக்குரல் கேட்ட மாத்திரத்தில் ஆபத்பாந்தவனாகிய கிருஷ்ண பரமாத்மா திரெளபதியின் மானம் காத்தருளினான்.

இவ்வாறு திரெளபதியின் மானம் காத்த கண்ணன், தருமர் சூதாடுவதைத் தடுக்காமல் இருந்தது ஏன்? அல்லது சூதாட்டத்தில் தருமர் வெற்றி பெறுவதாக நிலைமையை மாற்றா மல் விட்டது ஏன்? என்ற கேள்வி எழுகிறது.

இங்குதான் ஓர் உண்மைத் தத்துவத்தை நாம் புரிந்தாக வேண்டும். பாரதத்துக் கிருஷ் ணனைப் பொறுத்தவரை அதர்மமாகிய துரி யோதனர் தரப்பை அழித்து, தர்மத்தின் பாத்திரமாக இருக்கக்கூடிய பாண்டவர்களை வெல்ல வைக்க வேண்டும்.

இதற்கான ஒரு வழியாக சூது அமைகிறது. சூதில் பங்கேற்க வேண்டாம் என்று தருமரைத் தடுப்பது கிருஷ்ணருக்கு கடின மன்று.

அதுதான் முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. சூதாட்டத்தில் தருமர் வெல்வ தாகவும் துரியோதனன் தோற்பதாகவும் செய்தால் நாடு பாண்டவர்களுக்கு கிடைக்கும்
ஆனால் அஃது முறையன்று. தர்மத்தை தர்மத்தினூடாகவே அடைய வேண்டும். சூது அதர்மமானது. அதர்மத்தினூடு தர்மம் அடையப்பட்டால் அதுவும் அதர்மமே.
ஆகையால்தான், சூதில் தருமரைத் தோற்க வைக்கிறார் கிருஷ்ணர்.

தருமர் சூதில் தோற்பதனூடாக கெளரவர் களின் அதர்மத்தனம் வெளிப்படுத்தப்படும். அவ்வேளை பாண்டவர்கள் சபதம் செய்வர். அந்தச் சபதத்தினூடாக மகாபாரதப் போரை நடத்த முடியும்.

கெளரவர் – பாண்டவர் ஆகிய சகோதரர் களுக்கிடையில் சண்டை நடக்க வேண்டும். அப்போதுதான் தர்மத்தின் பக்கம் நிற்பது யார் என்பது புரியும்.

இதனாலேயே திரெளபதியின் மானம் காத்த ஆபத்பாந்தவன் தருமர் சூதாடுவதைத் தடுக் காமல் விட்டார்.

இதை நாம் கூறும்போது இது எதற்கானது என்று நீங்கள் கேட்கலாம்,
ஆம், 19ஆவது திருத்தச் சட்டமூலம் நீக்கப் படுவதும் 20 வருவதும் கூட, மகாபாரதத்தில் சகோதரர் சண்டை நடத்திய கிருஷ்ணனின் வேலையாக இருக்கலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link