இனத்துக்காகத் தமிழ்க் கட்சிகள் ஒன்றுபட வேண்டிய நேரம்
Share
அரசியல் நீரோட்டத்தில் நடந்த ஆட்சி மாற்றம் அரசியலமைப்பில் மாற்றத்தை ஏற்படுத் தப் போகின்றது.
அதிலும் குறிப்பாக 19ஆவது திருத்தச் சட்டமூலத்தை இல்லாதொழிப்பதற்கான அத்தனை ஏற்பாடுகளும் பூர்த்தியாயிற்று.
இதில் வேடிக்கை என்னவெனில், 19 ஆவது திருத்த சட்டமூலத்தை கொண்டு வந்த அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன; பாராளுமன்ற உறுப்பினர்களைப் பார்த்து எனது அதிகாரத்தைக் குறைப்பதற்காக உங்களிடம் ஆணை கேட்கிறேன் என்று கூறியிருந்தார்.
ஜனாதிபதிக்கு இருக்கக்கூடிய நிறை வேற்று அதிகாரம் இந்த நாட்டின் ஜனநாய கத்துக்குப் பாதகமானதென்ற அடிப்படையிலும் பாராளுமன்றத்துக்கு அதிகாரத்தை வழங்க வேண்டும் என்ற கோதாவிலும் 19ஆவது திருத்தச் சட்டமூலத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொண்டு வந்திருந்தார்.
ஆனால் இப்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்வின் ஆட்சியில் 19ஆவது திருத்தச் சட்டமூலம் நீக்கப்படப் போகின்றது.
இதற்கு மைத்திரிபால சிறிசேனவும் ஆதரவு வழங்கப் போகின்றார் என்பதுதான் இங்கு கவனிக்கப்பட வேண்டிய விடயம்.
19ஆவது திருத்தச் சட்டமூலம் நீக்கப்படுவதனால் ஜனாதிபதிக்கு வரக்கூடிய அதிகாரங்கள் என்ன என்பது தெரிந்தாயிற்று.
இருந்தும் 19ஆவது திருத்தச் சட்ட மூலத்தை நீக்குவதற்குத் தேவையான ஆதரவு பாராளுமன்றத்தில் கிடைக்கப் போகின்றது என்பதில் மாற்றுக் கருத்திற்கிடமில்லை.
இங்கு தமிழ் மக்களைப் பொறுத்தவரை தென்பகுதி ஆட்சிப்பீடம் கொண்டு வருகின்ற அரசியலமைப்புகளுக்கு வாழப் பழகிக் கொள்வதைத் தவிர வேறுவழியில்லை என்பதே நிலைமையாயிற்று.
எனினும் இலங்கையில் சிங்கள ஆட்சியாளர்கள் தமக்குச் சாதகமாகக் கொண்டு வருகின்ற அரசியலமைப்புகளைக் கடந்து, தமிழ் மக்கள் தங்களின் உரிமையை – தாய கத்தை – பூர்வீகத்தைக் காப்பாற்ற வேண்டுமாயின் அதற்கான ஒரே வழி தமிழ்த் தரப்பு கள் ஒன்றுபடுவதாக மட்டுமே இருக்க முடியும்.
எனவே தமிழ் அரசியல் கட்சிகள் தமக் கிடையேயான பேதங்களை மறந்து, கருத்து வேறுபாடுகளைத் துறந்து தமிழினத்தின் பெயரால் ஒன்றுபட வேண்டும்.
இந்த ஒற்றுமைக்கான முயற்சிகளை முன்னெடுப்பதில் தமிழ் மக்கள் பேரவை போன்ற மக்கள் இயக்கங்கள் அதிதீவிரம் காட்ட வேண்டும். இது காலத்தின் கட்டாய தேவை யாகும்.