புதிய துணைவேந்தருக்கு முன் பாரிய பொறுப்புகள்
Share
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராகப் பேராசிரியர் சி.ஸ்ரீசற் குணராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேரவையால் தெரிவு செய்யப்பட்ட மூன்று பேராசிரியர்களில் முன்னிலையில் இருந்தவர் பேராசிரியர் சிறி சற்குணராஜா என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
தவிர, துணைவேந்தர் நியமனத்தில் கால இழுத்தடிப்புகள் எதுவுமின்றி உடனடியாகவே அந் நியமனத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் வழங்கியுள்ளமை ஒரு சிறந்த நிர் வாக ஆட்சி முறைமைக்கு உகந்தது என்பதை இங்கு சுட்டிக்காட்டுவது பொருத்துடையது.
இவை ஒருபுறமிருக்க, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் ஸ்ரீசற்குணராஜா அவர்களின் முன் பாரிய பொறுப்புகளும் சவால்களும் உள்ளன என்பதை இங்கு நினைவுபடுத்துவது காலத்தின் கட்டாய தேவை யாகிறது.
அந்த வகையில், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் தமிழர்களின் உயர்பீடம். தமிழ் மக் களின் சொத்து.
சைவப் பெருவள்ளல் சேர் பொன்.இராமநாதன் அவர்களின் ஈகை. இதற்கு மேலாக, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் என்பது தமிழர்களின் அடையாளம்.
அதனாலேயே யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் இலட்சினையாக நந்தி தெரிவு செய்யப்பட்டது.
தமிழர் இராச்சியத்தின் அடையாளமாக இருக்கக்கூடிய நந்திக்கொடி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கொடியாகப் பறந்து வீசி எங்கள் இனத்தின் வரலாற்றைப் பேசுகிறது.
எனினும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கடந்த நிர்வாகச் செயற்பாடுகளால் பல் கலைக்கழக நுழைவாயிலின் இருமருங்கிலும் இருந்த அதிகார நந்திகளை இடித்து உடைத்து அழித்து தமிழினத்துக்குப் பெரும் பாதகம் செய்யப்பட்டது.
இது தொடர்பில் எழுந்த கடும் எதிர்ப்பை சமாளிப்பதற்காக எலிக்குஞ்சு வடிவில் மூக்கும் முகமும் உடைந்த இரு சீமெந்துக் குவியல்களை நுழைவாயிலின் தூண்களில் வைத்து விட்டு இதோ நந்தியயன்று ஏமாற்று வித்தையும் செய்யப்பட்டது.
இதற்கு மேலாக, கிளிநொச்சி வளாகத்தில் புத்தர் சிலை வைப்பதற்கு இடம் ஒதுக்கிய வர்களால் பிள்ளையார் சிலையை பிரதிஷ்டை செய்வதற்கு இடம் ஒதுக்க முடியாமல் போயிற்று எனும்போது, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் எமது அடையாளங்கள் மறைப்புச் செய்யப்படுகின்ற முயற்சிகள் நடக்கின்றன என்பதைப் புரிய முடிகின்றது.
எனவே யாழ்ப்பாணப் பலைக்கழகத்தில் இருக்க வேண்டிய தமிழர் பண்பாடு என்ற விடயம்; அங்கு அனுமதிக்கப்படுகின்ற தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை, அங்கு இடம் பெறுகின்ற தமிழர் பாரம்பரிய நிகழ்வுகள் என்பவற்றில் எல்லாம் தங்கியுள்ளதென்பதால், இது விடயத்தில் புதிய துணைவேந்தர் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுப் பார் என நம்பலாம்.