இலங்கையுடன் இணைந்து பயணிக்க நோர்வே தயார்
Share
இலங்கையுடன் இணைந்து பயணிக்க நோர்வே அரசு தயாராக இருப்பதாக பிரதமர் மகிந்த ராஜபக்ஷவிடம் நோர்வே தூதுவர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான நோர்வே தூதுவர் டீரீன யுரன்லி எஸ்கடேல், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பை மேற்கொண்டார். கொழும்பு அலரி மாளிகையில் இந்தச் சந்திப்பு இன்றைய தினம் (27) இடம்பெற்றது.
பாராளுமன்ற தேர்தலில் வெற்றியீட்டியமைக்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ச அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்திருந்ததுடன், தேர்தலை முறையாக ஏற்பாடு செய்து, சமாதானமான முறையில் கொவிட்-19 பாதுகாப்பு வழிமுறைகளுக்கமைய முன்னெடுத் திருந்தமையையும் பாராட்டியிருந்தார்.
ஆரம்ப கட்டத்தில் இனங்கண்டு, துரித கதியில் தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்ததனூடாக கொவிட்-19 தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவதில் இலங்கை வெற்றிகரமாக செயலாற்றியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
புதிய அரசாங்கத்துடன் இணைந்து செயலாற்ற நோர்வே எதிர்பார்ப்பதாக பிரதமரிடம் தூதுவர் எஸ்கடேல் குறிப்பிட்டதுடன், இலங்கையுடன் நீண்ட காலமாக பேணி வரும் பங்காண்மை மற்றும் பரஸ்பர உறவுகளையும் பாராட்டியிருந்தார்.