Type to search

Editorial

உரிமையோடு கூடிய அபிவிருத்தியே தேவை

Share

இந்த நாட்டின் ஆதிக்குடிகளின் மொழி தமிழ் என்று பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் கூறிய கருத்தை பாராளுமன்ற உரைகள் அடங்கிய ஹன்சார்ட் டில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையைப் பேரினவாதிகள்முன்வைத்துள்ளனர்.

செம்மொழியாகிய தமிழ் மொழி உலகின் மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி என்று ஆய்வாளர்கள் நிரூபணம் செய்து வருகின்றனர்.

எனினும் இலங்கையில் சிங்கள ஆட்சியாளர்கள்; தமிழ் மொழியின் பெருமையை அதன் பழைமையை, வரலாற்றுத் தொன்மையை மழுங்கடிக்கும் வகையில் செயற்படுவதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர்.

சிங்கள மொழியின் தோற்றம் எத்தனை ஆண்டுகளுக்குட்பட்டதென்பதை மொழியிய லாளர்கள் மிகத் தெளிவாக வரையறுத்துக் கூறியிருக்கின்றனர்.

இருந்தும் இலங்கையின் பூர்வீகக் குடிகளின் மொழி தமிழ் என்று கூறுவதை சிங்கள இனவாதிகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர்கள் இந்த நாட்டின் ஆதிக் குடிகளின் மொழி சிங்களம் என்பதாக வரலாறு எழுத முற்படுகின்றனர்.

போதாக்குறைக்கு இராவணேஸ்வரன் சிங்களத் தலைவன் என்பதான கதை அளப்பு களும் நடந்தாகின்றன.

இவ்வாறான மனநிலை சிங்களப் பேரின வாதிகளிடம் இருப்பதன் காரணமாகவே தமிழ் மக்களின் வரலாற்று இடங்களும் தொன்மங்களும் கபளீகரம் செய்கின்ற திட்டங்களைப் பேரினவாதிகள் அமுலாக்கி வருகின்றனர்.

இத்தகைய நிலைமைகள் தமிழ் இனத்துக்குப் பேராபத்தை ஏற்படுத்துவதாக இருக்கின்ற போதிலும் அதன் தார்ப்பரியத்தைப் புரிந்து கொள்வதற்கு நம் தமிழர்கள் கூடத் தயாரில்லை என்றே கூறவேண்டும்.

எதுஎவ்வாறாயினும் தமிழ் மக்களின் இன்றைய அவசர தேவை அபிவிருத்தி என விதப் புரை செய்பவர்கள் இருக்கின்றனர்.

தமிழ் மக்களுக்கு அபிவிருத்தி என்பது அத்தியாவசியமானது என்பதை ஏற்றுக் கொள் கின்ற அதேவேளை, அதனையும் கடந்து உரிமை என்ற விடயம் முதன்மைப்படுகின்றது.

ஆம், உரிமை இல்லாத அபிவிருத்தி என்பது அர்த்தமற்றது. எந்த நேரமும் அது கபளீகரம் செய்யப்படக்கூடியது.

எனவே உரிமையோடு கூடிய அபிவிருத்தி என்ற விடயமே இங்கு வலியுறுத்தப்பட வேண்டும்.

இதைவிடுத்து அபிவிருத்தியை ஏற்படுத்தி விட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று நினைப்பது தமிழ் மக்களை ஏமாற்றுகின்ற கபடத் தனமேயன்றி வேறில்லை என்பது புரிதற்குரியது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link