காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை மகிந்த சந்திப்பார்
Share
பிரதமர் மகிந்தராஜபக் காணாமலாக்கப்பட்ட உறவுகளைச் சந்திக்க வேண்டுமென தம்மிடம் தெரிவித்ததாக மீன்பிடி மற்றும் கடல்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போது மேற்படி விடயம் தொடர்பில் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த தேர்தலில் தனக்கு வாக்களித்த மக்களின் தேவைகள், பிரச்சினைகளை நிச்சயம் அமைச்சரவைக்கு எடுத்துச் செல்வதுடன் அரசின் அபிவிருத்தித் திட்டங்களுக்குள் வடக்கு, கிழக்கை நிச்சயம் இணைப் பதாகவும் அதனை எவரும் தடுக்க முடிய தெனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கையின் 19ஆவது திருத்தச் சட்டம் நாட்டுக்கும் நாட்டின் பொருளா தாரத்துக்கும் தீங்கு விளைவிப்பதாக அமைந்திருப்பதாக அரசாங்கம் கருதுவதனால் மக்கள் அவர்களுக்கு வழங்கிய ஆணைக்கிணங்க அதனை மாற்றம் செய்ய முற்படுவதாகவும் இலங்கை கடல் எல்லைகளுக்குள் பிறநாட்டு மீனவர்கள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவதை அனு மதிக்க முடியாதெனவும் அதேபோல் உள் நாட்டில் காணப்படும் மீன்பிடி தொடர்பில், குறித்த மாவட்டத்தில் காணப்படும் மீனவர்களை பாதிக்காத வண்ணம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.