ஆட்சிக்கொரு பாடமாற்றம் ஆற்றலைகிறது எம் கல்வி
Share
இலங்கையின் கல்விக் கொள்கை குறித்த விமர்சனங்கள் இன்னமும் தீர்ந்தபாடில்லை.
காலத்துக்குக் காலம் ஆட்சிப் பீடமேறும் அரசாங்கங்கள் பாடத்திட்டங்களை மாற்றுவதி லேயே கண்ணும் கருத்துமாக இருக்கின்றன.
தேர்தல் முடிந்து புதிய அரசாங்கம் பதவி யேற்கும் போது புதிய கல்வி அமைச்சர் நிய மிக்கப்படுகிறார்.
அவர் கல்வி அமைச்சராகப் பதவியேற்ற தும் அவரின் முதலாவது அறிவிப்பு பாடத்திட்டம் பொருத்தமில்லை. அதனை மாற்றியே ஆக வேண்டும் என்பதாகவே இருக்கும்.
இந்த மரபை புதிய கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸூம் மீறாமல் பாடத்திட் டத்தை மாற்ற வேண்டும் எனக் கூறியுள்ளார்.
இஃது அரசாங்கங்களினதும் கல்வி அமைச்சர்களினதும் வழமையாக இருக்க,
பொதுப் பார்வையில் இலங்கையின் பாடசாலைக் கல்வியும் கலைத்திட்டமும் மனித வாழ்க்கைக்கு உதவுவதாக இல்லை என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.
இதன் காரணமாக பாடசாலைக் கல்வியை நிறைவுபடுத்தி விட்டு, எந்த வேலையிலும் இணைய முடியாத வெறுமை எம் இளம் சமூகத்திடம் இருப்பது உணரப்படுகின்றது.
இதுதவிர, இலங்கையின் பாடவிதானத்தில் சமய பாடம் கற்பிக்கப்படுகிறதாயினும் சமய பாடம் என்பது பரீட்சைப் பெறுபேற்றுக்கானதாக இருக்கின்றதேயன்றி, சமய பாடத்தைக் கற்றதனால் பண்பாட்டு விழுமியங்களும் மனித நேயங்களும் ஜீவகாருண்யமும் எங்களிடம் மிகுந்திருக்கிறது என்று கூற முடிகிறதா? என்றால் இல்லவே இல்லை.
ஆக, சமயக் கல்வி என்பது நம் மண்ணில் படுதோல்வி கண்டுள்ளது என்றே கூற முடி யும். இதை நாம் கூறும்போது, உங்களில் பலர் மெல்லியதாகச் சிரித்துக் கொள்வீர்கள்.
அந்தச் சிரிப்பின் உள்ளார்ந்தம்; பெளத்த பிக்குகளிடம் கூட மனிதநேயத்தை வளர்த்து விட முடியவில்லை எனும்போது, வாரத்தில் இரண்டு பாடவேளையாக, வெறும் 80 நிமிடங் கள் மட்டுமே போதிக்கப்படுகின்ற சமயக் கல்வி மாணவர்களிடம் அற வாழ்வை ஏற்படுத்தி விடும் என நினைப்பது தவறு.
ஆக எமது கல்வித்திட்டம், கலைத்திட்டம் என்பன மாற்றியமைக்கப்பட வேண்டும் என்பது உண்மையாயினும் அந்த மாற்றம் மாணவர் சமூகத்தில் நேர்க்கணிய மாற்றத்தை ஏற் படுத்த வேண்டுமே தவிர,மீண்டும் மீண்டும் பாடமாற்றத்தை மட்டும் செய்வதாக இருக்கக்கூடாது என்பதுதான் இங்கு கவனிக்கப்பட வேண்டிய விடயம்.