ஒளவையே கொடிது எது? கொரோனாக் காலத்து கற்றல்
Share
முருகப் பெருமானும் ஔவையாரும் நடத்திய உரையாடல் இன்றுவரை நம்மோடு பின் னிப் பிணைந்துள்ளன.
திரைப்படமாக, நாடகமாக, சிறுவர்களின் அரங்க நிகழ்வாக முருகன் – ஔவையர் உரை யாடல் நின்று நிலைப்பதற்குள் அந்த உரையாடலின் உட்பொருள் காத்திரமானதென்பது புரிதற் குரியது.
ஔவைப்பாட்டியைப் பார்த்து சேயோன் முருகன் ஔவையே! கொடிது எது என வினவு கின்றான்.
அதற்கு கொடிது கொடிது வறுமை கொடிது. அதனிலும் கொடிது இளமையில் வறுமை கொடிது என்பதாக கொடியதைப் பட்டியல் படுத்துகிறார் அம்மையார்.
இஃது வறுமை தாண்டவமாடிய காலத்து படைப்பு.
இப்போது முருகனும் ஔவையாரும் சந்தித்து ஔவையே! கொடிது எது என்று முரு கன் கேட்டால்,
ஔவையார் வறுமை கொடிது என்று ஒரு போதும் கூற மாட்டார்.
மாறாக கொடிது கொடிது கொரோனா கொடிது. அதனிலும் கொடிது கொரோனாக் காலத்து இணையவழி கற்றல் கொடிது. அதனிலும் கொடிது பிற்பகல் 3.30 மணிவரை பாடசாலையில் இருந்து கற்பது கொடிது.
அதனிலும் கொடிது கன்ரீன் இல்லாத பள்ளிகள் தாமே என்பதாக ஔவையாரின் பட்டியல் நீண்டு செல்லும்.
ஆம், கொரோனாத் தொற்று காரணமாக பாடசாலைகள் இயங்க முடியாமல் போனமை உண்மை.
பாடசாலைகள் இயங்க முடியாத சூழ்நிலையில் மாணவர்களுக்கான கற்றல் செயற் பாட்டை இணைய வழி மூலமாக முன்னெடுத்த போது, ஏழை மாணவர்கள் மிகுந்த கஷ்டங்களை அனுபவித்ததுடன் மனரீதியாகவும் அவர்கள் நெருக்கடியைச் சந்தித்தனர்.
எனினும் இணைய வழி வசதிகள் இல் லாத மாணவர்களின் நிலைமை பற்றிய சிந் தனை நம் கல்விச் சமூகத்திடம் இருக்க வில்லை என்பதை இங்கு கூறித்தானாக வேண்டும்.
இவை தவிர, பாடசாலைகள் இயங்க முடியும் என்ற சூழமைவு ஏற்பட்டபோது, உயர்தர மற்றும் சாதாரண தர மாணவர்களுக்கு பிற்பகல் 3.30 மணிவரை வகுப்புகளை நடத்து வது எனத் தீர்மானிக்கப்பட்டது.
யதார்த்த சூழ்நிலைகளைப் புரிந்து கொள்ளாமல் கல்வி அமைச்சு வெளியிட்ட சுற்று நிருபத்தை அமுலக்க முற்பட்டபோது குறித்த மாணவர்கள் மிகுந்த கஷ்டங்களை அனு பவிக்க நேரிட்டது.
பாடசாலைகளில் சிற்றுண்டிச்சாலைகள் இயங்காத நிலையில், காலை 7.30 மணியில் இருந்து பிற்பகல் 3.30 மணிவரை மாணவர்கள் தொடர்ச்சியாக கற்றல் செயற்பாட்டில் ஈடுபடுவதென்பது எந்த வகையிலும் பொருத்தப்பாடன்று.
இத்தகைய நிலைமைகள் மாணவர்களுக்கு மிகுந்த நெருக்கடிகளைக் கொடுப்பதுடன் பாடசாலைக்கு செல்கின்ற விருப்பத்தையும் குறைப்புச் செய்யும் என்பதால் மாணவர் சார்ந்து சிந்தித்துச் செயலாற்றுவதே நன்மை தரும்.