வலிந்து பகை தேடுவதும் முன்பு செய்த வினைப் பயனே!
Share
தினை விதைத்தவன் தினை அறுப்பானோ இல்லையோ வினை விதைத்தவன் வினை யறுப்பான். இதில் எந்த மாறுதலுக்கும் இடமில்லை.
இப்போது எம் தமிழர் அரசியல் படும் பாட்டை ஒரு கணம் பாருங்கள். இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு இப்படியயாரு கதிவரும் என்று யாராவது நினைத்திருப்பார்களா என்ன?
தோல்வியைச் சந்திக்கும்போதுதான் குற்றச்சாட்டுக்கள் துள்ளி எழும். பிளவுகள், பக்கச் சார்புகள், உடைவுகள், முறிவுகள், அடிதடிகள் என எல்லாமும் அரங்கேறிக் கொண்டிருக்கும்.
என்ன செய்வது கடந்த காலங்களில் இலங்கைத் தமிழரசுக் கட்சி செய்த வினைப் பயனை இப்போது அறுவடை செய்கிறது.
அதிலும் குறிப்பாக வடக்கு மாகாண முதல மைச்சராக இருந்த நீதியரசர் சி.வி. விக்னேஸ் வரனுக்கு எதிராக தமிழரசுக் கட்சியினர் சிலர் மிக மோசமான வேலைகளைச் செய்தபோது அதுகண்டு தமிழரசுக் கட்சியினர் எவரும் தவறு என்று உரைத்திலர்.
அன்று மெளனம் சாதித்ததன் விளைவு இன்று தாமே தமக்குப் பகையும் துன்பமுமாய் மாறி பிடுங்குப்படுகின்றனர்.
அதிலும் வேடிக்கை; தமக்குக் கிடைத்த ஒரேயயாரு தேசியப் பட்டியல் எம்.பிப் பதவி, யாருக்கு என்பதில் நடக்கின்ற கயிறிழுப்பில் யார் யார் மலாரடியாக விழுவார்கள் என் பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
எதுவாயினும் தமிழரசுக் கட்சியின் தலைவர் என்ற வகையில் அவர் ஆற்ற வேண்டிய கடமைகளை வலம்புரியில் எழுதிய கடிதத்தில் விலாவாரியாகப் பிரஸ்தாபித்திருந்தோம்.
ஆனால் நடந்தது எதுவுமில்லை.
என்ன செய்வது? மகனே! துரியோதனா நீ செய்வது பிழை என எடுத்துரைக்கும் தைரியம் திருத ராட்டிரனுக்கு இல்லையயன்றால், போர் முடிந் ததும் திருதராட்டிரன் துன்பப்படுவதுதானே நியதியாக இருக்கும்.
இதில் எவரும் விலகி நிற்க முடியாது.
இவை ஒருபுறமிருக்க, தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் எம்.பிப் பதவியை அம்பாறை மாவட்டத்துக்கு வழங்குவது எனக் கூறி விட்டு, பின்னர் இல்லை இல்லை என்று கூறுவ தானது தமிழரசுக் கட்சிக்குள் இருக்கக்கூடிய குழப்பத்தையே சுட்டி நிற்கின்றது.
எதையும் ஆற அமர சிந்தித்து முடிவெடுத் திருக்க வேண்டும். இதைவிடுத்து அம்பாறை க்கு நியமன எம்.பி என்று கூறிவிட்டு பின்னர் இல்லையயன்றால் அஃது அம்பாறை மக்களின் மனங்களை நோகடிப்பதாகும்.
இதுபற்றி மூத்த தொழிற்சங்கவாதியும் ஓய்வுநிலை நிர்வாக அதிகாரியுமான வேலுப் பிள்ளை பொன்னம்பலம் அவர்கள் கருத்து ரைக்கையில்; இனி தமிழரசுக் கட்சி கிழக்கு மாகாணத்துக்கு எந்த முகத்துடன் போக முடியும் எனக் கேட்டிருந்தார்.
ஆக, தேவையில்லாமல் பகை தேடுவது கூட முன்பு செய்த பழி பாவத்தின் விளைவு தான்.