ஜனநாயக தர்மத்துக்கு விரோதம் செய்து விடாதீர்
Share
எதிர்வரும் ஓகஸ்ட் 05ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது.
மக்கள் பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்காக நடைபெறுகின்ற இத்தேர்தலுக்காக செல விடப்படும் தொகையும் மனித உழைப்பும் கொஞ்சமல்ல.
தவிர, தேர்தலில் போட்டியிடுகின்றவர் களும் தமது வெற்றிக்காகக் கடுமையாகப் பாடுபடுகின்றனர்.
தேர்தல் தொடர்பாக அவர்களுக்கு ஏற்படுகின்ற செலவுகள் ஏராளம்.
இருந்தும் தவிர்க்க முடியாது என்ற கட்டத்தில் செலவுகள் செய்யப்படுகின்றன.
இந்நிலையில் தேர்தல் நீதியாகவும் நேர்மை யாகவும் நடைபெறுவது மிகவும் அவசிய மாகும்.
ஒவ்வொரு தேர்தலையும் நேர்மையாக நடத்த வேண்டும் என்பதற்காகத் தேர்தல் ஆணைக்குழுவும் தேர்தல் திணைக்கள உத்தியோகத்தர்களும் இரவு பகலாகப் பாடுபடுகின்றனர்.
இருந்தும் வாக்களிப்பு மற்றும் வாக்குகளை எண்ணுதல், பதிவிடுதல் என்ற கருமங்களில் முறைகேடுகள் நடந்து விடுவதான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.
இத்தகைய முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் அறவே இல்லாமல் செய் யப்பட்டு, தேர்தல் நீதியாக நடைபெற்றது என அனைவரும் ஏற்றுக் கொள்கின்ற சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும்.
இதற்காக வாக்காளர்கள், அரசியல் கட்சிகள், தேர்தல் கடமையில் ஈடுபடுவோர் என அனைவரும் நெஞ்சுக்கு நீதியாக நடந்து கொள்ள வேண்டும்.
அப்போதுதான் தர்மமும் ஜனநாயகமும் தளைக்கும்.
எனவே நடைபெறப் போகும் தேர்தலின் போது ஒவ்வொருவரும் பொறுப்புடன் செயற்படு வதை இறைவனின் பெயரால் உறுதி செய்து கொள்ளுங்கள்.
இவை ஒருபுறமிருக்க, தேர்தல் பிரசாரங்கள் கடுமையாக நடந்து கொண்டிருக்கையில் சில பொது அமைப்புகள் அரசியல் சார்ந்து எழுந்தமானமாக அறிக்கை விடுகின்றன.
இந்த அறிக்கைகள் ஒரு தரப்புக்குச் சாதக மாகவும் இன்னொரு தரப்புக்குப் பாதகமாக வும் அமைந்து விடுகின்றன.
இஃது ஆரோக்கியமான செயற்பாடாக இருக்க முடியாது.
பொது அமைப்புகள் என்ற பெயரில் அறிக்கைகள் விடப்படும்போது, அந்த அறிக்கைகள் வாக்காளர்களின் தீர்மானத்தில் தாக்கம் செய்கின்றன.
எனவே பொது அமைப்புகள் எழுந்தமான மாகச் செயற்படாமல், தமக்கு முன்னால் இருக் கக்கூடிய பொறுப்புக்களை உணர்ந்து இறை வனுக்குக் கணக்குக் கொடுக்க வேண்டும் என்ற தர்மத்தை நினைந்து செயற்பட வேண்டும்.
இஃது ஜனநாயகத்தின் ஆரோக்கியத்துக்கு அவசியமாகும்.