மூவின மக்களுக்கும் சமவுரிமை நிச்சயம்
Share
நாட்டில் வாழும் மூவின மக்களுக்கும் சமவுரிமை உள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆட்சி அமைத்தால் அனைத்து மக்களுக்கும் சமவுரிமை வழங்கப்படும் என பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று வியாழக்கிழமை கந்தளாய் குணவர்த்தன மண்டபத்தில் நடைபெற்றிருந்தது.
இதில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
கடந்த காலங்களில் அரசாங்கம் இரண்டு துருவங்களாக காணப்பட்டது. ஜனாதிபதி பேசுவதை பிரதமர் கேட்பதில்லை, பிரதமர் கதைப்பதை ஜனாதிபதி கேட்பதில்லை. தற்போது சுதந்திரமான அரசாங்கம் உள்ளது.
முப்பது வருடகால யுத்தத்தினை திரு கோணமலை மாவட்டத்தின் சேருவில மாவிலாறு பகுதியில் இருந்தே ஆரம்பித்தோம் என்பதை நான் இந்த நேரத்தில் நினைவுபடுத்துவதில் சந்தோசமடைகின்றேன்.
சீனித் தொழிற்சாலையை மீண்டும் ஆரம்பித்து பொருளாதார முன்னேற்றத்தினை ஏற்படுத்துவோம்.
மேலும் விவசாயிகளுக்கு மானிய வசதிகளை ஏற்படுத்துவோம்.நாட்டின் ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக நாம் எவ்வாறு ஒற்றுமையாக வாக்களித்தோமோ அதேபோன்று அனைவரும் ஒற்றிணைந்து பொதுஜன பெரமுனவிற்கு வாக்களித்து புதிய அத்தியாயத் தினை ஏற்படுத்துவோம் என குறிப்பிட்டுள்ளார்.