ஊரடங்கு அமுலில் இருந்தவேளை துணிகரத் திருட்டு
Share

மட்டுவில் சரசாலைப் பகுதியில் நேற்று அதி காலை 3 மணியளவில் ஊரடங்கு அமுலில் இருந்த வேளை திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் மட்டுவில் பன்றித் தலைச்சி அம்மன் ஆலய பிரதம சிவாச்சாரியார் வீட்டில் அதிகாலை இடம்பெற்றுள்ளது.
அயலில் உள்ள ஆலயத்தில் அலங்கார திருவிழா இடம்பெற்றுவரும் நிலையில் வேலை நிமிர்த்தம் சிவாச்சாரியார் வீட்டை விட்டு வெளியே வந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தி வீட்டினுள் நுழைந்து ஒளிந்து கொண்ட திருடர்கள் ஒன்பதே முக்கால் பவுண் தங்க நகைகளையும் ஐம்பதாயிரம் ரூபாய் பணத்தினையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
திருடர்கள் கையுறை மற்றும் முகக் கவசம் ஆகியன அணிந்தே திருட்டில் ஈடுபட் டுள்ளனர் என பொலிஸாரின் ஆரம்பக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.